தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிஎஃப் நிலுவைத் தொகை கேட்டு தூய்மைப்பணியாளர்கள் முற்றுகை

6 Jul 2026, 10:14 pm
பிஎஃப் நிலுவைத் தொகை கேட்டு  தூய்மைப்பணியாளர்கள் முற்றுகை
<p><strong>பிஎஃப் நிலுவைத் தொகை கேட்டு தூய்மைப்பணியாளர்கள் முற்றுகை</strong></p><p>மேட்டுப்பாளையம், ஜூலை 6- மேட்டுப்பாளையம் நகராட்சியில் நிலுவையில் உள்ள பி.எஃப் தொகையை வழங்கக் கோரி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்களன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் நகராட்சியில் 120-க்கும் மேற்பட்ட ஒப் பந்த தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 2024-ஆம் ஆண்டு முதல் சேர வேண்டிய பி.எஃப் தொகையை ஒப்பந்த நிறுவனம் செலுத்தவில்லை. தொழிலா ளர் நல வாரியம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத நக ராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, நகராட்சி ஆணையர் அமுதா, டி.எஸ்.பி பாஸ்கர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பி.எஃப் தொகையைச் செலுத்தாத ’டெக்டஸ் இன்ப்ரா’ (Tectus Infra pvt ltd) ஒப்பந்த நிறுவனத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. வரும் ஜூலை 8-ஆம் தேதிக்குள் அத்தொகையை செலுத்துவது குறித்து அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவ னம் தவறும் பட்சத்தில், கோவை பி.எஃப் அலுவலக ஆணைப் படி, நிலுவையில் உள்ள மொத்தத் தொகையான ரூ.48,16,642-ஐ வரும் ஜூலை 30-க்குள் செலுத்த நகராட்சி நிர்வாகம் மூலமாகவே சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் படும் என முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆவணத்தில் நக ராட்சி ஆணையர் கையொப்பமிட்டார். அதிகாரிகளின் இந்த உறுதியான நடவடிக்கையை ஏற்று, ஒரு மாதத்திற்குள் தீர்வு காண்பதாக அளித்த உறுதியின் பேரில் தூய்மைப் பணியாளர்கள் தற்காலிகமாக போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக இந்த பேச்சுவார்த்தையில், விசிக மாவட்டச் செயலாளர் ராசு தொல்குடி மைந்தன், சிஐடியு நிர்வாகிகள் ஷானவாஸ், சாமுவேல், நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.