மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேம்பாடு தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் சிஐடியு மனு
15 Jun 2026, 12:28 am
<p><strong>மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேம்பாடு தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் சிஐடியு மனு</strong></p><p>மேட்டுப்பாளையம், ஜூன் 14– மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேம் பாடு மற்றும் கூடுதல் ரயில்கள் இயக்குவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியு றுத்தி, சிஐடியு மேட்டுப்பாளையம் பொது தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தென் னக ரயில்வே பொதுமேலாளரை குன்னூர் ரயில் நிலையத்தில் சனியன்று நேரில் சந் தித்து மனு அளித்தனர். சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பாஷா, ஹபிபுல்லா, முகமது அலி ஜின்னா மற்றும் சானவாஸ் ஆகியோர் நேரில் அளித்த மனுவில், மேட்டுப்பாளை யம் ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் மற்றும் புதிய ரயில்களை இயக்க வேண்டும். ஏற்க னவே சிஐடியு அமைப்பின் தொடர் கோரிக் கையின் அடிப்படையில் ரயில்வே நிர்வாகத் தால் அறிவிக்கப்பட்ட ’மேட்டுப்பாளையம் - கோவை’ மெமு ரயிலில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க கூடுதல் பெட்டிகளை உடனடியாக இணைக்க வேண்டும். காட்டூர் ரயில்வே கேட் பகுதியில் நிலவி வந்த கடுமை யான போக்குவரத்து நெரிசலுக்கு தற்காலிக தீர்வு ஏற்படுத்தி தந்தமைக்காக தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கும், காவல்துறை அதி காரிகளுக்கும் அதிகாரிகள் முன்னிலையில் நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. அத்து டன், அப்பகுதியில் பொதுமக்கள் எவ்வித போக்குவரத்து நெரிசலுமின்றி தொடர்ந்து சென்று வர நிரந்தர வழிவகைகளை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. சிஐடியு-வின் கோரிக்கைகளை செவி மடுத்த ரயில்வே பொது மேலாளர், அனைத் தையும் முறையாக பதிவு செய்துகொள்ளு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், உடனடியாக உரிய தீர்வுகளை ஏற்ப டுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அதிகா ரிகளுக்கு அறிவுறுத்தினார்.</p>
