தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பள்ளி மாணவர்கள் செல்லும் பாதையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்காணிப்பு

4 Jun 2026, 10:57 pm
பள்ளி மாணவர்கள் செல்லும் பாதையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்காணிப்பு
<p>மேட்டுப்பாளையம், ஜூன் 4- மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ மாணவிகள் கடந்து செல்லும் பாதையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த சாலைகளில் நடந்து சென்று பாதுகாப்பு மற்றும் கண்கா ணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து வியாழ னன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவின்படி, கோவை மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்கா ணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட போலீசார் நகரவை பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றவும் மற்றும் அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை சோதனை மேற் கொண்டு கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய் யக்கூடாது என்று எச்சரித்தனர். பள்ளி மாணவ மாணவி கள் செல்லும் சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது, அவசியமின்றி கூடி நிற்க கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதே போல் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளனர். தினந்தோறும் பள்ளி நேரங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்கள் என்று உட் கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.