தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வரத்து குறைவால் உருளைக்கிழங்கு ஏற்றுமதி பாதிப்பு

27 Sept 2026, 11:51 pm
வரத்து குறைவால் உருளைக்கிழங்கு ஏற்றுமதி பாதிப்பு
<p><strong>வரத்து குறைவால் உருளைக்கிழங்கு ஏற்றுமதி பாதிப்பு</strong></p><p>மேட்டுப்பாளையம், செப்.27-மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு ஏல மண்டிகளுக்கு வரத்து குறைந்ததால், இங்கிருந்து அனுப்பி தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் உதகை உருளைக்கிழங்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 70க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு ஏல மண்டிகள் மற்றும் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கமும் உள்ளது. இங்கு கொண்டு வரப்படும் உதகை உருளைக்கிழங்குகள் தரம் பிரித்து, ஏலம் மூலம் மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்குகள் மேட்டுப்பாளையம் சந்தையில் இருந்து சுமார் 50 சதவீதம் கேரளாவுக்கு செல்கிறது. மீதம் உள்ள 50 சதவீதங்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. உதகைஉருளைக்கிழங்குகளின் தரம் மற்றும் தனிச்சுவையின் காரணத்தால் இவை இலங்கை, மாலத்தீவு, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. வழக்கமாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தலா 45 கிலோ எடை கொண்ட 3,000 முதல் 4,000 மூட்டை உருளைக்கிழங்கு விற்பனைக்கு வரும். தற்போது நீலகிரியில் உருளைக்கிழங்கு பயிரிடும் பரப்பளவு குறைந்தது மற்றும் போதிய மழையில்லாததால் இவ்வாண்டு 1,500 முதல் 2,000 வரை தான் லோடு வரை தான் வரத்து உள்ளது. 3,000 மூட்டைகளுக்கு மேல் வரத்து வந்தால் தான் ஏற்றுமதிக்கு வியாபாரிகள் அதிகம் முன் வருவார்கள். ஆனால், தற்போது 1800 மூட்டைகள் மட்டுமே வந்துள்ளன. இதனால் 30 முதல் 40 சதவீதம் வரை ஏற்றுமதி குறைந்துள்ளது. மேலும், ஞாயிறன்று 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.2,040 வரை விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.