முந்தய பக்கம்

ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்திடுக

24 Sept 2026, 12:56 am
ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்திடுக

ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்திடுக

சிஐடியு ஆர்ப்பாட்டம்மேட்டுப்பாளையம், செப்.23-ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கோவைமேட்டுப்பாளையம் நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகஊழியர்கள் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே, சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் மேட்டுப்பாளையம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஒப்பந்த பணியாளர்களான தங்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும்.பிடித்தம் செய்யப்பட்ட இபிஎப் தொகையை, அவரவர் கணக்கில் வரவு வைக்க வேண்டும். பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5 ஆம் தேதி முறையாக சம்பளம் வழங்க வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேட்டுப்பாளையம் நகராட்சி ஊழியர் சங்க தலைவர் குருபானி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் கே.ரத்தினகுமார், சங்கத்தின் பொறுப்பாளர் ஆனந்தகுமார், இன்ஜினியரிங் சங்கத்தின் பொருளாளர் ஏஜி.சுப்பிரமணியம், தாலுகா ஒருங்கிணைப்பாளர் சி.பெருமாள், மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கனகராஜ், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில்,ஏராளமான நகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram