300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு
10 Aug 2026, 1:00 am

300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம், ஆக.9-மேட்டுப்பாளையம் அருகே முள்ளி வனத்துறை சோதனைச்சாவடி அருகே 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரு பெண் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நீலகிரி மாவட்டம், குந்தாவை அடுத்துள்ள பெங்கால் மட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜ் கண்ணன் (54), போஜன் (70), ராதிகா (55). இவர்கள் மூவரும்காரமடையை அடுத்துள்ள மத்தம்பாளையம் பகுதியில் வசித்து

வந்தனர். இந்நிலையில், சனியன்று மூவரும் ஒரே காரில் உதகை எடக்காடு பகுதியில் நிகழ்ந்த உறவினர் வீட்டில் துக்க நிகழ்விற்கு சென்றுள்ளனர். காரை ராஜ் கண்ணன் ஓட்டி சென்றுள்ளார். இதன்பின் ஞாயிறன்று மாலை மீண்டும் மஞ்சூர், முள்ளி வழியாக மத்தம்பாளையம்வீட்டிற்கு செல்ல புறப்பட்டுள்ளனர்.

முள்ளி வனத்துறை சோதனைச்சாவடி அருகே உள்ள பெரும்பள்ளம் பகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காரமடை வனத்துறையினர், உள்ளூர் மக்கள் உதவியுடன்சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து

விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க நிகழ்விற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிய போது, கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.