மதுக்கடையை மூட வலியுறுத்தி முற்றுகை உடனடியாக கடையை மூடிய எம்எல்ஏ
8 Jun 2026, 10:58 pm
<p><strong>மதுக்கடையை மூட வலியுறுத்தி முற்றுகை உடனடியாக கடையை மூடிய எம்எல்ஏ</strong></p><p>மே.பாளையம், ஜூன் 8- அரசு டாஸ்மாக் மதுக் கடையை மூட வலியுறுத்தி மேட்டுப்பாளையம் எம்எல்ஏவை முற்றுகையிட்டு கிராம மக்கள் வலியுறுத்திய நிலையில், உடனடியாக மதுக் கடையை மூட நடவடிக்கை எடுத்தார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத் துள்ள காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் அம்மன் கோவிலுக்கு அருகே (சுமார் இரு நூறு மீட்டர்) செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கடையை (எண் 2253) மூட வேண்டும் என வெள்ளியங் காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந் நிலையில், அண்மையில் தமிழக அரசு பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே இயங்கி வரும் டாஸ் மாக் கடைகளின் 717 பட்டியலில் வெள்ளியங்காட் மதுகடை இடம் பெறவில்லை. இதனால் ஏமாற்ற மடைந்த உள்ளூர் மக்கள் மீண்டும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். ஆனால் இது வரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், திங்களன்று வெள்ளியங்காடு அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக் காக வருகை தந்த மேட்டுப்பாளையம் தவெக சட்ட மன்ற உறுப்பினர் சுனில் ஆனந்தை முற்றுகையிட்ட கிராம மக்கள், “நீங்கள் பங்கேற்க வந்துள்ள பள்ளி யின் அருகே மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் மாணவ, மாணவிகள் மற் றும் ஊர் மக்கள் கடந்து செல்லவே இயவில்லை. போதை ஆசாமிகளால் பல்வேறு இன்னல்களை சந் தித்து வருவது குறித்து பல மனுக்கள் அனுப்பியும் பலனில்லை என்பதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எம்எல்ஏ விடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்தே கோவை டாஸ்மாக் மேலாளளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சுனில் ஆனந்த் எம்எல்ஏ. குறிப்பிட்ட கடையை உடனடியாக மூட வேண்டும் என கூறினார். மாற்று இடம் கிடைக்கும் வரை சில நாட்கள் மட்டும் அங்கேயே மதுக்கடை இயங்க வேண்டியுள்ளது என அதிகாரிகள் கூறியதை ஏற்க மறுத்த எம்எல்ஏ கடையை இன்றே மூடவேண்டும் இனி இங்கே உள்ள மதுக்கடையை இயங்க அனு மதிக்க இயலாது என காட்டமாக தெரிவித்தார். இதனையடுத்து வெள்ளியங்காடு டாஸ்மாக் மதுக்கடை இன்றே மூட உத்திரவிட்ட அதிகாரிகள் இனி இங்கு டாஸ்மாக் கடை இயங்காது என உறுதி யளித்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் தங்களது கோரிக்கையை ஏற்று உடனடி நடவ டிக்கை எடுத்த எம்எல்ஏ க்கு தங்களது பாராட்டினை தெரிவித்தனர்.</p>
