அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளர்கள் போராட்டம்
56 minutes before
<p><strong>அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளர்கள் போராட்டம்</strong></p><p>மேட்டுப்பாளையம், ஜூலை 9- ஊதியம் முறையாக வழங்குவதில்லை என்று மேட்டுப் பாளையம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 52 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இதற்கு முன்னர் இருந்த ஒப்பந்ததாரர் மாதா மாதம் அவர்களது சம்பள தொகையினை வங்கி கணக்கில் முறையாக செலுத்தி வந்துள்ளார். ஆனால், புதிதாக ஒப்பந்தம் எடுத்தவர் மாத ஊதியத்தை முறையாக, குறிப்பிட்ட தேதியில் வழங்குவ தில்லை. இதேபோல் இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட பலன்களை இதுவரை ஒப்பந்த ஊழியர்களின் கணக்கில் செலுத்துவ தில்லை. இதனால் மாத ஊதியத்தை குறிப்பிட்ட தேதியில் முறையாக வழங்கக்கோரி வியாழனன்று ஒப்பந்தப் பணியா ளர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இச்சம்பவம் குறித்து அறிந்து மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை அழைத்து பேசி ஊதியத்தை குறிப்பிட்ட தேதியில் முறையாக வழங்கக்கோரி அறிவுறுத்தினார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவே, பணியாளர்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>
