தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஐஎப்எஸ் தேர்வில் அரசு வனக்கல்லூரி மாணவர்கள் சாதனை

16 May 2026, 1:12 am
ஐஎப்எஸ் தேர்வில் அரசு வனக்கல்லூரி மாணவர்கள் சாதனை

ஐஎப்எஸ் தேர்வில் அரசு வனக்கல்லூரி மாணவர்கள் சாதனை

மேட்டுப்பாளையம், மே 15- மத்திய அரசுப் பணியாளர் தேர்வா ணையம் (UPSC) நடத்திய இந்திய வனப்பணி (IFS) தேர்வில், மேட்டுப் பாளையம் வனக்கல்லூரி மாணவர் கள் இருவர் அகில இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதன் மூலம் இக்கல்லூரியில் பயின்று இந்திய வனப்பணி அதிகாரிகளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் வனவியல் கல்வியில் ஒரு முன் னோடி நிறுவனமாக திகழ்ந்து வருகி றது.

இங்கு வனவியல் மற்றும் பட்டுப் புழுவியல் ஆகிய துறைகளில் இள நிலை முதல் முனைவர் பட்டம் வரை உயர்தரக் கல்வி வழங்கப்பட்டு வருகி றது. கடந்த மே 8-ஆம் தேதி வெளியான யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வு முடிவுக ளில், இக்கல்லூரியின் முன்னாள் மாண வர்களான காவியா (கோவை) மற்றும் கலைப்பிரியன் (தர்மபுரி - கள்ளிப்பட்டி) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில், அகில இந்திய அளவில் காவியா 64 ஆவது இடத்தையும், கலைப்பிரி யன் 71 ஆவது இடத்தையும் பிடித்து கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ள னர்.

இக்கல்லூரியில் பயின்ற மாணவர் கள் இதுவரை நாடு முழுவதும் 118 பேர் ஐ.எப்.எஸ் அதிகாரிகளாகப் பணி யாற்றி வந்த நிலையில், தற்போது காவியா மற்றும் கலைப்பிரியன் ஆகி யோரின் வெற்றியின் மூலம் இக்கல் லூரி உருவாக்கிய அதிகாரிகளின் எண் ணிக்கை 120 என்ற மைல்கல்லை எட்டி யுள்ளது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வனக்கல்லூரி முதல்வர் பாலசுப்ர மணியம், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் நேரில் வாழ்த்துத் தெரி வித்தனர்.

தனது வெற்றி குறித்துக் கூறிய மாணவர்கள், வனக்கல்லூரி யில் நாங்கள் முழுமையாகப் பயின்ற வனவியல் பாடமும், பேராசிரியர்களின் முறையான வழிகாட்டுதலுமே இந்த வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்.

எங்களை ஊக்கப்படுத்திய முதல்வர் மற்றும் பெற்றோருக்கு எங்களது நன் றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், என்றனர்.

ஒரே கல்லூரியில் இருந்து இத்தனை வனப்பணி அதிகாரிகள் உருவாகி வரு வது, தமிழகத்திற்கும் குறிப்பாக கோவை மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.