முந்தய பக்கம்

ஆபத்தான செல்போன் கோபுரத்தை அகற்றிடுக

27 Sept 2026, 11:44 pm
ஆபத்தான செல்போன் கோபுரத்தை அகற்றிடுக
<p><strong>ஆபத்தான செல்போன் கோபுரத்தை அகற்றிடுக</strong></p><p>மேட்டுப்பாளையம், செப்.27-நூறு அடி உயரத்திற்கு செடி, கொடிகள் படர்ந்து, பச்சை நிற கோபுரமாய் காட்சியளிக்கும் செயல்படாத செல்போன் கோபுரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட எல்.எஸ்.புரம் என்னும் குடியிருப்பு பகுதியின் மையத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு சுமார் 100 அடி உயரத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு, அதன் அருகிலேயே கட்டுப்பாட்டு அறையும் கட்டப்பட்டது. இந்த கோபுரத்தை அமைத்த தனியார் செல்போன் நிறுவனம் தற்போது செயல்பாட்டில் இல்லாத நிலையில், பல ஆண்டுகளாக இந்த கோபுரம் பராமரிப்பின்றி விடப்பட்டுள்ளது. இதனால் இரும்பால் ஆன இந்த கோபுரத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து அவை, கோபுரம் முழுவதுமாக படர்ந்துள்ளது. பல ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இன்றி, இரும்பு தூண்கள் துருப்பிடிக்க துவங்கி விட்டதால், சாய்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், இதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram