மணமும் குணமும் இருந்தும் விலையில்லை மேட்டுப்பாளையம் கறிவேப்பிலை விவசாயிகள் கவலை!
6 May 2026, 1:14 am

மணமும் குணமும் இருந்தும் விலையில்லை மேட்டுப்பாளையம் கறிவேப்பிலை விவசாயிகள் கவலை!

சமையலில் நறுமணத்திற் காகவும், மருத்துவ குணத் திற்காகவும் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக விளங்குவது கறிவேப் பிலை.

தமிழகத்தின் ’வாசனைத் தோட்டம்’ என்று அழைக்கப்படும் கோவை மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கறி வேப்பிலை சாகுபடி என்பது வெறும் விவசாயம் மட்டுமல்ல, அது பல்லாயிரக்கணக்கான குடும் பங்களின் வாழ்வாதாரம். ஆனால், தற்போது நிலவும் கடும் விலை வீழ்ச்சி, இப்பகுதி விவசாயிகளின் வாழ்வில் கசப்பை ஏற்றியுள்ளது. செங்காம்பு கறிவேப்பிலை மேட்டுப்பாளையம், கார மடை, சிறுமுகை போன்ற பகுதி களில் வாழைக்கு அடுத்தபடியாக கறிவேப்பிலை மிக முக்கியப் பயி ராகும்.

குறிப்பாக, இங்கு விளை யும் ’செங்காம்பு’ ரக கறிவேப் பிலைக்கு சந்தையில் தனி மவுசு உண்டு. இதன் அடர் பச்சை நிறம், நீடித்த நறுமணம் மற்றும் மருத் துவத் தன்மை காரணமாக கேரளம் போன்ற அண்டை மாநிலங்களில் இதற்கு எப்போதும் பெரும் வர வேற்பு இருக்கும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, கறிவேப்பிலை விவ சாயிகளுக்கு ஓஹோ என்று இல்லையென்றாலும், ஏதோ பர வாயில்லை என்கிற நிலை இருந்து வந்தது.

ஒரு கிலோ கறிவேப் பிலை குறைந்தபட்சம் ரூ.55 முதல் அதிகபட்சம் ரூ.65 வரை விற்பனை யானது.

பராமரிப்புச் செலவு போக ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைத்து வந்த நிலையில், தற் போது விலை அதலபாதாளத் திற்குச் சென்றுள்ளது.

தற்போது சந்தையில் ஒரு கிலோ கறிவேப் பிலை ரூ.20 முதல் ரூ.25 வரை மட் டுமே விற்பனை செய்யப்படுகிறது.

இந்த திடீர் விலை வீழ்ச்சி விவ சாயிகளிடையே பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விலை வீழ்ச்சிக்குத் தட் டுப்பாடு காரணமல்ல, மாறாக சந்தையில் ஏற்பட்டுள்ள அதிகப் படியான வரத்தே முக்கியக் காரண மாக உள்ளது.

ஆந்திரா மற்றும் ஆத்தூர் வரத்து: தற்போது ஆந்திர மாநிலம் மற்றும் தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதி களில் கறிவேப்பிலை விளைச்சல் அபரிமிதமாக உள்ளது.

அங்கி ருந்து லாரி லாரியாக கறிவேப் பிலை கோவை மற்றும் கேரள சந்தைகளுக்கு வரத் தொடங்கி யுள்ளதால், மேட்டுப்பாளையம் கறிவேப்பிலைக்கான தேவை குறைந்து விலை சரிந்துள்ளது.

மேட்டுப்பாளையம் கறிவேப் பிலையின் முக்கிய நுகர்வோரான கேரளம், தற்போது ஆந்திரா கறி வேப்பிலையை நாடுவதால் உள் ளூர் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கறிவேப்பிலை ஒரு லாபகர மான பயிர் என்றாலும், அதற்கான உழைப்பும் செலவும் அதிகம்.

தர மான செங்காம்பு ரக நாற்றுகள் தேர்வு செய்யப்பட்டு நடப்படுகின் றன. ஒருமுறை நட்ட செடி, சுமார் 15 முதல் 20 ஆண்டுகள் வரை பலன் தரும்.

ஆனால், இதற்குத் தேவை யான நீர் மேலாண்மை மற்றும் உர மேலாண்மை மிக முக்கியம்.

மேட்டுப்பாளையம் பகுதியில் நில வும் தட்பவெப்ப நிலை இதற்கு மிக வும் சாதகமானது.

பொதுவாக கறி வேப்பிலை நட்ட 10 முதல் 12 மாதங் களில் முதல் அறுவடைக்கு வரும்.

அதன் பிறகு ஆண்டுக்கு 3 முதல் 4 முறை அறுவடை செய்யலாம்.

ஒரு ஏக்கரில் கறிவேப்பிலை பயி ரிட நிலத்தை தயார் செய்தல், நாற் றுகள், நடவு கூலி, உரம், பூச்சிக் கொல்லி மருந்து என ஆரம்பகட் டச் செலவுகள் அதிகமாகும்.

பராமரிப்புச் செலவு ஒரு கிலோ கறிவேப்பிலையை அறுவடை செய்து, கட்டு கட்டி, சந்தைக்குக் கொண்டு செல்ல கூலி மற்றும் போக்குவரத்துச் செலவே கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை ஆகிறது.

தற்போதைய விற்பனை விலை ரூ.20 எனும் போது, விவசாயிகளுக்குக் கிடைக்கும் நிகர லாபம் மிகச் சொற்பமே.

சில நேரங்களில் போட்ட அசலைக் கூட எடுக்க முடி யாத சூழல் நிலவுகிறது.

விலை வீழ்ச்சி காலங்க ளில் கறிவேப்பிலை விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களைக் குறைக்க அரசு, கறிவேப்பி லையை அப்படியே விற்பனை செய்யாமல், அதை பொடி யாகவோ, எண்ணெயாகவோ அல் லது உலர்த்தப்பட்ட இலைகளா கவோ மாற்றி விற்பனை செய்ய மதிப்புக்கூட்டும் நிலையங்கள் மேட்டுப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட வேண்டும்.

கறி வேப்பிலை எளிதில் வாடிவிடும் தன்மை கொண்டது.

எனவே, விலையில்லாத காலங்களில் அறு வடை செய்த இலைகளைப் பாது காத்து வைக்க குளிர்பதனக் கிடங்கு வசதி செய்து தரப்பட வேண்டும்.

அரசு தலையிட்டு விவ சாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து உழவர் சந்தைகள் மற்றும் வெளிமாநிலங் களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

உண்பதற்கு மணம் சேர்க்கும் கறிவேப்பிலை இன்று அதை வளர்க்கும் விவசாயியின் வாழ் வில் கசப்பை தந்துள்ளது.

மேட்டுப்பாளையம் பகுதி விவசா யிகள் இயற்கை சீற்றங்களைத் தாண்டி கடுமையாக உழைத்து விளைச்சலை கொடுத்தாலும், சந்தை விலை நிர்ணயம் அவர்கள் கையில் இல்லை என்பது கசப்பான உண்மை.

ஆந்திரா மற்றும் ஆத் தூர் வரத்து குறையும் வரை காத்தி ருக்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.

அரசு மற் றும் வேளாண் துறை உரிய நட வடிக்கை எடுத்து, இப்பகுதி விவ சாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வழிவகை செய்ய வேண் டும் என்பதே இப்பகுதி கறிவேப் பிலை விவசாயிகளின் எதிர்பார்ப் பாக உள்ளது. (ந.நி)