தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இடைத்தரகர்கள் இல்லாமல் தட்டைக்காய் விற்பனை போட்டி போட்டு வாங்கிச்செல்லும் வியாபாரிகள்

14 Jun 2026, 2:31 am
இடைத்தரகர்கள் இல்லாமல் தட்டைக்காய் விற்பனை  போட்டி போட்டு வாங்கிச்செல்லும் வியாபாரிகள்

இடைத்தரகர்கள் இல்லாமல் தட்டைக்காய் விற்பனை போட்டி போட்டு வாங்கிச்செல்லும் வியாபாரிகள்

மேட்டுப்பாளையம், ஜூன் 13- மேட்டுப்பாளையம் பவானி ஆற்று படுகையில் விளைவிக்கப்ப டும் தட்டைக்காயை இடைத்தரகர்க ளின் தலையீடு இல்லாமல், கேரள வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு வாங்கி செல்கின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் பகுதியில் விளைவிக்கப் படும் நாட்டு காய்கறியான தட்டைக் காயை அண்டை மாநிலமான கேரளா வில் இருந்து வரும் மொத்த வியா பாரிகள் விவசாயிகளிடம் நேரிடை யாக வாங்கி செல்கின்றனர். பவானி ஆற்றின் கரையோரப் பகுதி கிராமங் களான லிங்காபுரம், காந்தவயல், உளியூர் உள்ளிட்ட பகுதிகளில் விவ சாயிகள் நாட்டு காய்கறிகளான தட்டைக்காய், கத்திரி, அவரை போன்ற குறுகிய கால விளைச்சலை தரும் பயிர்களை பயிரிட்டு வருகின்ற னர். கடந்த ஒரு மாத காலமாக மேட் டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிக ளில் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் இப்பகுதியில் தட்டைக்காய் விளைச்சல் அதிகரித் துள்ளது. இதனை வாங்க கேரள வியாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வருவதால் தட்டைக் காயை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வரு கின்றனர். தனிச்சுவை காரணமாக கேரள மக்களிடம் மேட்டுப்பாளையம் பகுதி யில் விளைவிக்கப்படும் தட்டைக் காயிற்கு நல்ல வரவேற்பு இருப்ப தால் வியாபாரிகள் நேரிடையாக அறுவடையாகும் விவசாய நிலத் திற்கே வந்து கிலோ 20 ரூபாய் வரை கொடுத்து டன் கணக்கில் வாங்கி செல்கின்றனர். சீரான சீதோஷ்ன நிலையால் விளைச்சல் அதிகரித் துள்ள நிலையில் இடைதரகர்கள் இல்லாமல் உள்ளூர் மற்றும் கேரள வியாபாரிகள் நேரிடையாக உரிய விலை கொடுத்து செல்வதால் மேட்டுப்பாளையம் பகுதி விவ சாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.