வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்
2 Oct 2026, 1:01 am

வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்

மேட்டுப்பாளையம், அக்.1-அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என சிஐடியு மேட்டுப்பாளையம் தாலுகா பொதுத்தொழிலாளர் சங்கத்தின்மகாசபை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா பொதுத்தொழிலாளர் சங்கத்தின்(சிஐடியு) 14 ஆவது ஆண்டு மகாசபை மாநாடு, தனியார் மண்டபத்தில் புதனன்று நடைபெற்றது. மூத்த தோழர்ஆனந்தாயி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டிற்கு சம்சுதீன் தலைமை வகித்தார்.

வேலை அறிக்கையினை பொதுச்செயலாளர் எஸ்.பாஷா, வரவு, செலவு அறிக்கையினை பொருளாளர் சத்யா ஆகியோர் தாக்கல் செய்தனர். சிஐடியு மாவட்டத்தலைவர் கே.மனோகரன், துணைத்தலைவர் என்.ஜாகீர் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.

இதில், அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். மேட்டுப்பாளையம் தாலுகா பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்க வேண்டும். அரசு மருத்துவமனையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, போதிய மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாவட்டச்செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார்.