நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் புவியியல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
27 Oct 2026, 11:26 pm
<p><strong>நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் புவியியல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு</strong></p><p>மேட்டுப்பாளையம், அக்.27-மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பர்லியாறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் ஒன்றிய மற்றும் மாநில புவியியல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பர்லியாறு பகுதியில் கடந்து மூன்று தினங்களுக்கு முன் பெய்த மிக கனமழை காரணமாக பெரிய அளவில் மண்சரிவுகள் ஏற்பட்டது. இதில் அரசு பேருந்து சிக்கி அதன் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் சீரமைப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருவதால் தற்போது வரை மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கபட்டுள்ளது. மண்சரிவுகள் ஏற்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் ஒன்றிய, மாநில அரசுகளின் புவியியல் துறை அதிகாரிகள் நேரடிஆய்வுப் பணியில் செவ்வாயன்று ஈடுபட்டனர்.மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் பாறைகளின் அமைப்பு, மண்ணின் தன்மை மற்றும் அதன் இறுக்கம், மரங்களின் உறுதித்தன்மை போன்றவைகள் குறித்து 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு மண் மாதிரிகள் சேகரித்தனர்.தற்போதைக்கு மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மண் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு சீரமைப்பு தொடர்பான கட்டுமானப் பணிகள் மற்றும் வாகனங்களை இவ்வழியே மீண்டும் அனுமதிப்பது குறித்து இந்த அதிகாரிகளின் ஆய்வறிக்கைக்கு பின்னரே முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.</p>
