மேட்டுப்பாளையத்தில் புத்தக திருவிழா துவக்கம்
10 hours before
<p><strong>மேட்டுப்பாளையத்தில் புத்தக திருவிழா துவக்கம்</strong></p><p>மேட்டுப்பாளையம், ஆக. 7-கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆறாம் ஆண்டு புத்தகத் திருவிழா துவங்கியது.இஎம்எஸ் திருமண மண்டபத்தில் 47 பல்வேறு தலைப்புகளில் புத்தகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னையில் உள்ளது போல் கோளரங்கம், வான் கோள்களை “3 டி” யில் 360 டிகிரியில் காணும் வசதி, வான்வெளியில் உள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்களை காண டெலஸ்கோப் வசதி,ஜப்பானியகாகிதக்கலை “ ஒரிகாமி” மந்திரமா தந்திரமா பயிற்ச்சிகள், அறிவியல் விஞ்ஞானிகளுடன் உரையாடும் நிகழ்வு ஆகியவைஇடம் பெற உள்ளன.</p><p>7 ஆம் தேதி மாலை துவங்கி 16 ஆம் தேதி வரை என பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இப்புத்தகக்கண்காட்சியில் தினசரி இரண்டு பேர் என எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள் என 16 பேர் பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
