மெட்ரோ சுரங்கப்பணி: முல்லை இயந்திரம் நிறைவு, குறிஞ்சி தொடக்கம்
29 Nov 2025, 4:58 pm
<p><strong> மெட்ரோ சுரங்கப்பணி: முல்லை இயந்திரம் நிறைவு, குறிஞ்சி தொடக்கம்</strong></p>
<p>சென்னை, நவ.29- சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்தில் சுரங்கம் தோண்டும் முல்லை இயந்திரம் பணியை நிறைவு செய்துள்ளது. குறிஞ்சி இயந்திரம் சுரங்கப்பணியை தொடங்கியுள்ளது. கட்டம் 2 வழித்தடம் 5 மாதவரம் பால் பண்ணையில் தொடங்கி கோயம் பேடு, போரூர், ஆலந்தூர் வழியாக சோழிங்க நல்லூர் வரை 47 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. 5.8 கி.மீ. சுரங்கப்பாதைக்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு இயந்தி ரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முல்லை இயந்திரம் கொளத்தூர் சாய்வு தளத்திலிருந்து கொளத்தூர் நிலையம் வரை 246 மீட்டர் நீளத்திற்கு மே 23, 2025 அன்று தொடங்கிய சுரங்கப்பணியை நிறைவு செய்தது. 1.8 மீட்டர் மிகக் குறைந்த சுமை, 3.8 சதவீத செங்குத்தான சாய்வு, உள்வட்டச் சாலையின் நடுவில் அதிக போக்குவரத்து போன்ற சவால்களை கடந்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணி முடிக்கப்பட்டது. குறிஞ்சி இயந்திரம் கடினமான பாறை அடுக்குகள், 230 மீட்டர் நீளத்திற்கு கூர்மையான வளைவுகள் போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டி யுள்ளது. கொளத்தூர் மெட்ரோ நிலையத்தில் ஒரே நேரத்தில் ஒரு இயந்திரம் பணி தொடங்கியும், மற்றொரு இயந்திரம் பணி முடித்து வெளியே வந்ததும் இந்தியா விலேயே முதல் முறையாகும். நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், இணை பொது மேலாளர் எம்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>
<p> </p>
