திருவான்மியூர் - இந்திரா நகர் இடையே மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி
26 Mar 2026, 2:46 pm
<p><strong>திருவான்மியூர் - இந்திரா நகர் இடையே மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி</strong></p>
<p>சென்னை, மார்ச் 26- சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டத்தில் திருவான்மியூர் முதல் இந்திரா நகர் வரையிலான நிலத்தடி வழித்தடப் பணிகள் அண்மையில் தொடங்கப் பட்டுள்ளது. சுமார் ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் செயல்படுத் தப்படும் இந்த மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் சுமார் 100 மீட்டர் தூரம் வரை பணிகள் நிறை வடைந்துள்ளன. மூன்று வழித்தடங்கள் சென்னையில் மாதவரம் முதல் சிப்காட் வரை (வழித் தடம் 3), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை (வழித்தடம் 4) மற்றும் மாதவ ரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (வழித்தடம் 5) என மூன்று முக்கிய வழித்தடங் களில் கட்டுமானப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதில் வழித்தடம் 3-ன் கீழ் வரும் திருவான்மியூர் - இந்திரா நகர் இடையேயான சிறிய நிலத்தடி பகுதியில் தற்போது சுரங்கம் தோண்ட ப்பட்டு வருகிறது. திருவான்மியூர் முதல் இந்திரா நகர் வரையிலான சுமார் 650 மீட்டர் தூரத்தி லான நிலப்பரப்பு, மிகவும் கடினமான பாறைகளைக் கொண்ட பகுதியாகும். இத்தகைய சூழலில் பணி யாற்றுவதற்கென்றே வடி வமைக்கப்பட்ட பிரத்யேக மான ‘டிபிஎம்’ இயந்திரம் இங்கு பயன்படுத்தப்படு கிறது. பாறைகளின் கடினத்தன்மை காரணமாக, சுரங்கம் தோண்டும் வேகம் சற்று குறைவாகவே இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இயந்திரத்தின் வெட்டும் பாகங்களை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும் என்பதால், இந்த 650 மீட்டர் தூரத்தைக் கடக்க சுமார் 6 மாதங்கள் வரை ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏன் தாமதம் இப்பகுதியில் சுரங்கம் தோண்டுவதற்கு முன்ன தாக, நிலையத்திற்கான கட்டுமானப் பள்ளத்தை அமைப்பதிலேயே பெரும் சவால்கள் இருந்தன. பாறை களை உடைக்க ‘கண்ட்ரோ ல்டு பிளாஸ்டிங்’ எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட வெடி பொருட்களைப் பயன் படுத்துவதற்குப் பதிலாக, ரசாயனங்கள் மூலம் பாறை களைச் சிதைக்கும் முறையை ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர். மேலும், ஆரம்பகட்டத்தில் கோரப் பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் நிறுவனங்கள் அதிகத் தொகையைக் குறிப்பிட்ட தால், அவை ரத்து செய்யப் பட்டு மீண்டும் விடப்பட்டன. இத்தகைய காரணங்களால் இப்பணிகள் தொடங்கு வதில் சற்று தாமதம் ஏற்பட்டது. தற்போது ஒரு இயந்திரம் மட்டுமே பணியில் ஈடுபட்டுள் ளது. திருவான்மியூர் பகுதி யில் நிலவும் இட நெருக்கடி காரணமாக, இந்த முதல் இயந்திரம் இந்திரா நகரைச் சென்றடைந்த பிறகே, இரண்டாவது இயந்திரம் திருவான்மியூரில் இருந்து தனது பணியைத் தொடங்க முடியும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.</p>
