முந்தய பக்கம்

மெட்ரோ ரயில் அதிமுகவின் 'பெயர்' மெஷின்!

11 Apr 2026, 5:30 am
மெட்ரோ ரயில் அதிமுகவின் 'பெயர்' மெஷின்!

மெட்ரோ ரயில் அதிமுகவின் 'பெயர்' மெஷின்!

சென்னை மெட்ரோ திட்டத்திற்கு 63 ஆயிரம் கோடி பெற்றுத் தந்தது அதிமுக அரசுதான் என்பது அப்பட்டமான பொய். உண்மையில் ஒன்றிய அரசு ஒதுக்கியது வெறும் 7,425 கோடி மட்டுமே.

22 ஆயிரம் கோடி மாநில அரசின் நிதி. மீதி கடன். அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பும் மாநில அரசுக்கே உள்ளது. மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்குப் பாதுகாப்பு நிதி கேட்கத் துணிவில்லாத அதிமுக, பொய்யை மட்டுமே நம்பியுள்ளது.

ஸ்காட்லாந்து யார்டும்... தூக்குத் தண்டனையும்!

அதிமுக ஆட்சியில் காவல்துறை ‘ஸ்காட்லாந்து யார்டு’ போலத் திறமையாகச் செயல்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 காவல்துறையினருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதுதான் இவரது ‘திறமையான’ ஆட்சிக்குக் கிடைத்த சான்றிதழ். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரும் இத்தகைய பித்தலாட்டப் பேச்சுகளைப் பேச எடப்பாடிக்குத் தனி தைரியம்தான் வேண்டும்.

ஜி.கே.வாசனின் வினோத நிபந்தனையும், பதிலடியும்!

“கோவிலுக்குப் போகாதவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது” என்று ஜி.கே.வாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, “நிலத்தில் இறங்கி வேலை செய்யாதவர்களுக்கு நிலமே இருக்கக் கூடாது என்றும் சொல்லலாமா?” என நறுக்கென்று பதிலடி கொடுத்துள்ளார். வழிபாட்டு உரிமையை ஜனநாயகக் கடமையுடன் குழப்பும் வாசனின் பேச்சு அரசியல் முதிர்ச்சியற்றது.

Share
FacebookXWhatsAppTelegram