தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மெட்ரோ இரண்டாம் கட்டப் பணி போரூர் - வடபழனி இடையே 26 அடுக்குத் தளங்கள் அமைப்பு நிறைவு

29 Mar 2026, 3:34 pm
மெட்ரோ இரண்டாம் கட்டப் பணி  போரூர் - வடபழனி இடையே 26 அடுக்குத் தளங்கள் அமைப்பு நிறைவு
<p><strong>மெட்ரோ இரண்டாம் கட்டப் பணி &nbsp;போரூர் - வடபழனி இடையே 26 அடுக்குத் தளங்கள் அமைப்பு நிறைவு</strong></p> <p>சென்னை, மார்ச் 29- சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில், வழித்தடம் 4-ன்கீழ் வரும் போரூர் முதல் வடபழனி வரையிலான பகுதி யில் 26 அடுக்குத் தளங்கள் கட்டும் பணி ஒரு வாரத்திற்கு முன்பே நிறைவடைந்தது. பூந்த மல்லி முதல் வடபழனி வரையிலான இந்த 14.6 கி.மீ வழித்தடத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க ஏதுவாக, மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் விதித்திருந்த முக்கிய நிபந்தனையை மெட்ரோ நிர்வாகம் இதன் மூலம் பூர்த்தி செய்துள்ளது. இரட்டை அடுக்கு மேம்பாலமாக அமை யும் இந்தப் பகுதியில், வழித்தடம் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு பாதைகளும் இணையாகச் செல்லும் 4 கி.மீ தூரத்தில் இந்த 26 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 700 பணியாளர்களைக் கொண்டு கடந்த 20 &nbsp;நாட்களில் இரவு பகலாக உழைத்து இந்தப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது இப்பணிகள் முடிந்துள்ள நிலையில், மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையத்திடம் இதற்கான அறிக்கையைச் சமர்ப்பித்து, ரயில்களின் வேகம் மற்றும் இடைவெளி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த மெட்ரோ நிர்வாகம் கோரிக்கை விடுத் துள்ளது. இதன் மூலம் பூந்தமல்லி - &nbsp;வடபழனி இடையிலான மெட்ரோ சேவை &nbsp;விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.