தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆலந்தூரில் மெட்ரோவின் பிரமாண்ட ஐடி பூங்கா மாடி கட்டிடம் மற்றும் நேரடி இணைப்பு வசதி

24 Jan 2026, 3:38 pm
ஆலந்தூரில் மெட்ரோவின் பிரமாண்ட ஐடி பூங்கா  மாடி கட்டிடம் மற்றும் நேரடி இணைப்பு வசதி
<p><strong>ஆலந்தூரில் மெட்ரோவின் பிரமாண்ட ஐடி பூங்கா &nbsp;மாடி கட்டிடம் மற்றும் நேரடி இணைப்பு வசதி</strong></p> <p>சென்னை,ஜன.24- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது வருவாயைப் பெருக்கவும், பயணி களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தை ஒட்டி ஒரு பிரமாண்ட வணிக மற்றும் ஐடி &nbsp;மையத்தை உருவாக்கத் திட்டமிட்டுள் ளது. இதற்காக, இரண்டாம் கட்ட மெட்ரோ நிலையத்துடன் நேரடியாக இணையும் &nbsp;வகையில் 3.75 லட்சம் சதுர அடி பரப்பள வில் ஏழு மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் &nbsp;தளங்களில் வணிக வளாகங்களும் &nbsp;மேல் தளங்களில் ஐடி நிறுவனங்களுக்கான அலுவலகங்களும் அமையவுள்ளன. இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாக, அலுவலக ஊழியர்கள் மற்றும் பயணி கள் சாலைக்கு வராமல் நேரடியாக நிலை யத்திற்குச் செல்ல இணைப்புப் பாலம், &nbsp;இரண்டு அடுக்கு வாகன நிறுத்துமிடம் மற்றும் பசுமையான திறந்தவெளி பகு திகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான விரிவான வடிவமைப்பைத் தயாரிக்க தற்போது டெண்டர் கோரப் பட்டுள்ளது. மெட்ரோ நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களைப் பயன்படுத்தி கூடுதல் வருமானம் ஈட்டும் &nbsp;&lsquo;ஏர் ரைட்ஸ்&rsquo; &nbsp;கொள்கையின் கீழ் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் தவிர, இரண்டாம் கட்டத் &nbsp;திட்டத்தின் கீழ் மந்தைவெளி, திரு மங்கலம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 13 இடங்களில் சுமார் 30 லட்சம் சதுர அடி பரப்பளவில் இத்தகைய &nbsp;மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே ரூ.435 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் கட்டத்தை விட இரண்டாம் கட்டத்தில் மெட்ரோ இணைப்பு அதிக மாக இருப்பதால், இந்த வணிகத் திட்டங் களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.