விளையாடு
28 Jun 2026, 10:25 pm

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

கடைசி லீக் ஆட்டத்திலும் அர்ஜெண்டினா அபார வெற்றி

புதிய வரலாற்றுச் சாதனை படைத்தார் மெஸ்ஸி

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொட ரின் லீக் ஆட்டங்கள் ஞாயிறன்று (இந்திய நேரப்படி) நிறைவு பெற்றது. இந்நிலையில், ஞாயிறன்று நடை பெற்ற குரூப் ‘ஜே’ பிரிவுக்கான லீக் ஆட்டம் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜெ ண்டினா-ஜோர்டான் அணிகள்மோதின. இந்த ஆட்டத்தின் 19ஆவது நிமி டத்தில் அர்ஜெண்டினா வீரர் ஜியோ வானி லோ செல்சோ பிரீ கிக் கோல டித்தார். இது 30 மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் விளாசப்பட்ட பிரம்மாண்ட கோலாகும். தொடர்ந்து 31ஆவது நிமி டத்தில் அர்ஜெண்டினாவுக்கு பெனா ல்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த பெனா ல்டி வாய்ப்பில் அந்நாட்டின் நட்சத்திர வீரர் லவுடாரோ மார்டினெஸ் கோல டித்தார். முதல் பாதியில் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி களமிறங்காமலேயே அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியின் 55ஆவது நிமி டத்தில் ஜோர்டான் வீரர் மூசா அல் தமாரி கோலடித்தார். ஆட்டம் பரபரப் பான கட்டத்தை நோக்கி நகர ஆரம்பி த்தது. இதனையெடுத்து ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் மாற்று ஆட்டக் காரராக களம் புகுந்தார் மெஸ்ஸி. 80ஆவது நிமிடத்தில் பெனால்டி ஆர்க் பகுதியை தாண்டி கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை (சுமார் 25 மீட்டருக்கும் அதிக மாக) மெஸ்ஸி கோலாக மாற்றினார். இதுவே ஆட்டத்தின் வெற்றிக் கோலாக அமைந்தது. ஆட்டநேர முடிவில் அர்ஜெண்டி னா 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. மேலும் 3 லீக் போட்டி களிலும் வெற்றி பெற்று, குரூப் ‘ஜே’ பிரிவில் முதலிடத்துடன் அர்ஜெண்டி னா (9 புள்ளிகளுடன்) நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அர்ஜெண்டினா அணி தனது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் கேபோ வெர்டே (ஜூலை 4) அணியை எதிர்கொள்கிறது.

மெஸ்ஸி வரலாற்றுச் சாதனை

உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி. இந்த உலகக்கோப்பை தொடரில் இது அவருடைய 6ஆவது கோலாகும். இதன் மூலம் தங்கக் காலணி (Golden Boot) பந்தயத்தில் மெஸ்ஸி முன்னிலையில் உள்ளார். உலகக்கோப்பைகளில் ஒட்டு மொத்தமாக மெஸ்ஸி அடித்த 19ஆவது கோல் இதுவாகும். அதே போல ஒரே உலகக்கோப்பை போட்டியில் இரண்டு நேரடி ப்ரீ-கிக் (லோ செல்சோ, மெஸ்ஸி) மூலம் கோல் அடித்த 4ஆவது அணி என்ற பெருமையை அர்ஜெண்டினா பெற்றது. இதற்கு முன் பிரேசில் (1966), யூகோஸ்லேவியா (1974), ஜப்பான் (2010) இந்த சாதனையை அரங்கேற்றி இருந்தன. மேலும், அர்ஜெண்டினாவின் பரேடஸ் இப்போட்டியில் 154 பாஸ்களை (Passes) வெற்றிகரமாகக் கடத்தி, உலகக்கோப்பை போட்டி ஒன்றில் அதிக பாஸ்கள் செய்த வீரர் (அர்ஜெண்டினா அளவில் மட்டும்) என்ற சாதனையைப் படைத்தார்.

புதிய கவுரத்துடன் வெளியேறிய ஜோர்டான்

3 போட்டிகளிலும் தோற்றதால் ஜோர்டான் அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. எனினும் சாதனையுடன் தான் ஜோர்டான் தாய்நாட்டிற்கு செல்கிறது. உலகக்கோப்பையில் முதன்முறையாக அறிமுகமான ஜோர்டான் அணி, தான் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் கோல் அடித்த அணி என்ற பெருமையுடன் (2006இல் ஐவரி கோஸ்ட் அணிக்குப் பிறகு) விடைபெற்றது.

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் - திங்கள், செவ்வாய்

பிரேசில் - ஜப்பான் நேரம் : இரவு 10.30 மணி இடம்: ஹூஸ்டன், அமெரிக்கா

ஜெர்மனி - பராகுவே நேரம் : அதிகாலை 2.00 மணி இடம் : பாஸ்டன், அமெரிக்கா

நெதர்லாந்து - மொரோக்கோ நேரம் : காலை 6.30 மணி இடம் : மோன்டரி, மெக்சிகோ

நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்ற நாடுகள் : மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, கனடா, போஸ்னியா, பிரேசில், மொரோக்கோ, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பராகுவே, ஜெர்மனி, ஐவரிகோஸ்ட், ஈக்வடார், நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன், பெல்ஜியம், எகிப்து, ஸ்பெயின், கேபோ வெர்டே, பிரான்ஸ், நார்வே, செனகல், அர்ஜெண்டினா, ஆஸ்திரியா, அல்ஜீரியா, கொலம்பியா, போர்ச்சுக்கல், காங்கோ, இங்கிலாந்து, குரேசியா, கானா (ஈரான் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றதாக பிபா தவறாக அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.)

ஞாயிறன்று நடைபெற்ற மற்ற போட்டிகளின் முடிவுகள்

குரூப் ‘எல்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பனாமாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. குரூப் ‘எல்’ பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் கானாவைத் தோற்கடித்தது. குரூப் ‘கே ‘ பிரிவில் இரு பலமான அணிகள் (கொலம்பியா-போர்ச்சுக்கல்) மோதிய இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. குரூப் ‘கே’ பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் காங்கோ அணி 3-1 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. குரூப் ‘ஜே’ பிரிவில் அல்ஜீரியா - ஆஸ்திரியா அணிகள் மோதிய ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

மாற்றுத்திறன் சவால்களை வென்று உலகக்கோப்பையை ரசிக்கும் ரசிகர்கள்

23ஆவது சீசன் உலகக்கோப்பை தொடரை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் முழுமையாக ரசிக்கக்கூடிய தொடராக உருவெடுத்துள்ளது. மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தைக் காண முடியாத பார்வைத்திறன் குறைபாடுடைய ரசிகர்களுக்காக பல அதிரடித் தொழில்நுட்பங்கள் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

காதுகளில் விரியும் நேரடி ஆட்டக்களம்

பார்வைத்திறன் குறைபாடுடைய ரசிகர்களுக்காக வழக்கமான வர்ணனை போல் அல்லாமல் ‘ஆடியோ டிஸ்கிரிப்டிவ் கமெண்டரி’ (Audio Descriptive Commentary - ஏடிசி) தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஆட்டத்தின் ஒவ்வொரு சிறு அசைவையும் மிகத் துல்லியமாக விவரிக்கிறது. அதே நேரத்தில் வீரர்களின் ஓட்டம், உடல்மொழி மற்றும் முகபாவனைகள்; பந்தின் வேகம், அது நகரும் திசை மற்றும் மைதானத்தின் ஒட்டுமொத்த சூழலையும் ஏடிசி விவரிக்கிறது. ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் இந்த வர்ணனை கிடைக்கிறது. ரசிகர்கள் இதனை ‘FIFA Audio Description’ செயலி (App) மூலம் தங்கள் ஸ்மார்ட்போனிலேயே எளிதாகக் கேட்கலாம்.

தொட்டுணர்ந்து ரசிக்கும் ‘ஹாப்டிக் போர்டுகள்’

மேலும் பார்வைத்திறன் குறைபாடுடைய ரசிகர்களுக்காக கால்பந்து மைதானம் போன்ற வடிவத்தைக் கொண்ட இந்தத் தொடு உணர்வு போர்டுகள் (Haptic Boards), மைதானத்தில் நடக்கும் நேரடி ஆட்டத்தை அப்படியே அதிர்வுகளாக (Vibrations) மாற்றுகின்றன. இதுகுறித்து கனடா மகளிர் பிளைண்ட் கால்பந்து அணியின் வீராங்கனையான ஜிலியன் ஸ்லோன் கூறுகையில், “இந்த போர்டில் கோல் வலை, பெனால்டி பகுதி என அனைத்தும் மேடாகத் தெரியும். பந்து இருக்கும் இடம் ஒரு சிறிய புள்ளியாக அதிர்ந்து நகர்வதால், ஆட்டம் எங்கு நடக்கிறது என்பதை என்னால் தொட்டே உணர முடிகிறது” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். எனினும் டல்லாஸ், நியூயார்க், சியாட்டில் (அமெரிக்கா) மற்றும் வான்கூவர் (கனடா) என 4 மைதானங்களில் மட்டுமே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

சைகை மொழி மற்றும் இதர சிறப்பம்சங்கள்

இந்த உலகக்கோப்பைத் தொடர் அனைத்து மாற்றுத்திறனாளி ரசிகர்களையும் பின்வருமாறு அரவணைக்கிறது:

•முதன்முறையாக அனைத்துப் போட்டிகளுக்கும் நேரடி சைகை மொழி (Sign Language) விளக்கம்.

• உணர்ச்சிவசப்படுபவர்களுக்கான (Sensory needs) அமைதியான அறைகள் மற்றும் சிறப்பு உதவிப் பணியாளர்கள்.

• நடமாட்டக்குறைபாடுடை யவர்களுக்கான சிறப்பு டிக்கெட்டுகள் மற்றும் சக்கர நாற்காலி (Wheelchair) வாகன வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொழில்நுட்பத்தின் சரியான உதவியோடு உலகக்கோப்பை 2026, உலகெங்கும் உள்ள அனைத்து ரசிகர்களின் இதயங்களையும் சமமாக வென்று வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் அனைத்து மைதானங்களிலும் இல்லாதது, சற்று சோகமான விஷயம் தான். - எம்.சதீஸ் குமார்