விளையாடு
23 Jun 2026, 10:06 pm

உலகக்கோப்பை கால்பந்து 2026

ஒரே நாளில் மெஸ்ஸி 2 உலக சாதனை நாக் அவுட் சுற்றில் அர்ஜெண்டினா

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திங்களன்று நள்ளிரவில் நடைபெற்ற ‘குரூப் ஜே’ பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா - ஆஸ்திரியா அணிகள் மோதின.

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பந்தின் கட்டுப்பாடு, ஷாட்கள் என அனைத்திலும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜெண்டினா அணி ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் கோலடித்தது. இது உலக சாதனை கோலாகும். உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோலடித்தவர் என்ற வரலாற்றுச் சிறப்புடன் மெஸ்ஸி (17 கோல்கள்) இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியில் ஆஸ்திரியா தட்டுப்பாட்டத்தை பலப்படுத்தியது. அர்ஜெண்டினாவின் அனைத்து தாக்குதல்களையும் ஆஸ்திரியா வீரர்கள் சமாளித்தனர். ஆட்டத்தின் 90ஆவது நிமிடம் வரை மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டநேர உதிரி நிமிடத்தில் (90+5’) மெஸ்ஸி மீண்டும் கோலடிக்க அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் அடிக்கப்பட்ட கோல் மிகவும் போராட்டமிக்க கோலாகும். கடுமையான முயற்சிக்கு இடையே மெஸ்ஸி கோலடித்தார். இந்த வெற்றியின் மூலம் அர்ஜெண்டினா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

உலக சாதனை தகர்ப்பு

இந்த போட்டியில் 2 கோல்களை அடித்த அர்ஜெண்டினா கேப்டன் லயோனல் மெஸ்ஸி, உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெர்மனி யின் மிரோஸ்லாவ் குளோசவை (16 கோல்கள்) முந்தி, 18 கோல்களுடன் முதலிடம் பிடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இது 12 ஆண்டுக்குப் பிறகு முறியடிக்கபட்ட சாதனை ஆகும். மேலும் உலகக்கோப்பையில் தொடர்ந்து 6 போட்டிகளில் கோலடித்த பிரான்சின் ஜஸ்ட் பொன்டைன், பிரேசிலின் ஜெய்ர்சின்ஹோ ஆகியோரின் சாதனையையும் மெஸ்ஸி சமன் செய்துள்ளார். மெஸ்ஸி புதனன்று தனது 39 வயது பிறந்த நாள் கொண்டாடுகிறார். தற்போது உலகக்கோப்பை கால்பந்தில் அதிக கோல் அடித்தது, அவருக்கு சிறந்த பிறந்தநாள் பரிசாக அமைந்தது.

உலகக்கோப்பை கால்பந்து : இன்றைய ஆட்டங்கள்

கொலம்பியா - காங்கோ டி ஆர் (குரூப் கே) நேரம் : காலை 7.30 மணி இடம் : ஸபோன், மெக்சிகோ போஸ்னியா - கத்தார் (குரூப் பி) நேரம் : நள்ளிரவு 12:30 மணி இடம் : சியாட்டில், அமெரிக்கா

சுவிட்சர்லாந்து - கனடா (குரூப் பி) நேரம் : நள்ளிரவு 12:30 மணி இடம் : வான்கூவர், கனடா

ஸ்காட்லாந்து-பிரேசில் (குரூப் சி) நேரம் : அதிகாலை 3.30 மணி இடம் : மியாமி, அமெரிக்கா தென் ஆப்பிரிக்கா - தென் கொரியா (குரூப் ஏ) நேரம் : காலை 6.30 மணி இடம் : குவாடாலூப், மெக்சிகோ

செக் குடியரசு - மெக்சிகோ (குரூப் ஏ) நேரம் : காலை 6.30 மணி இடம் : மெக்சிகோ சிட்டி

சேனல் : ஜீ 5 (ஓடிடி), யூனைட்8 (தொலைக்காட்சி)

நாக் அவுட்டில் பிரான்ஸ் அணி

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் ‘குரூப் ஐ’ பிரிவுக்கான லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் - இராக் அணிகள் மோதின. மழைக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மாப்பே (பிரான்ஸ்) ஆட்டத்தின் 14ஆவது நிமிடத்தில் கோல் கணக்கை துவங்கி வைத்தார். இதன்மூலம் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2ஆம் பாதியின் 54ஆவது நிமிடத்தில் மாப்பே மீண்டும் ஒரு கோலடித்தார். அடுத்த 12 நிமிட இடைவெளியில் பிரான்ஸ் வீரர் டெம்பெல்லி (66’) கோலடித்தார். ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

வறுமை டூ கின்னஸ் சாதனை

ஈரான் கோல்கீப்பர் அலிரெசாவின் கசப்பான மறுபக்கம்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் திங்க ளன்று பெல்ஜியம் - ஈரான் அணிகள் மோதின. பலமிக்க பெல்ஜியம் அணியை 0-0 என்ற கணக்கில் ஈரான் சமன் செய்ய, ஈரானின் கோல் கீப்பர் அலிரெசா பெய்ரான்வண்ட் (33 வயது) 7 முறை கோல் விழாமல் தடுத்ததே முதன்மையான காரணம் ஆகும். இந்த உலகக்கோப்பை தொடரின் மிகச்சிறந்த ‘சேவ்’ என்று போற்றப்படக் கூடிய ஒரு அற்புதமான தடுத்தலும் அதில் அடங்கும். அந்த தடுத்தலை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது ; மிருகங்களின் பாய்ச்சல் வேகத்திலும் ஒப்பிட முடியாது. அவ்வளவு அழகான, வலிமைமிக்க மிகச் சிறந்த தடுத்தல் ஆகும். கடந்த 2 நாட்களாக அலிரெசா பெய்ரான்வண்டின் கோல் கீப்பிங் வீடியோ மின்னல் வேகத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் ஒரு சாதனையாளராக போற்றப்படும் அலிரெசா பெய்ரான்வண்டின் வாழ்வின் மறுபக்கம் மிகக் கடின மான சூழல் கொண்டது. அதாவது வறுமை, வீடற்ற நிலையிலிருந்து நாட்டின் ஹீரோவாக உயர்ந்த அவ ரது அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்திற்கு இந்த ஆட்டம் (பெல்ஜி யம் அணிக்கு எதிராக) மேலும் ஒரு மகுடமாய் அமைந்துள்ளது. வறுமையை வென்ற அலிரெசா ஈரான் நாட்டின் லொரெஸ்தானின் கரடுமுரடான மலைப்பகுதியில் வாழும் ஒரு நாடோடி குர்திஷ் லக் குடும்பத்தில் பிறந்தவர் அலிரெசா பெய்ரான்வண்ட். இவர் கடுமையான வறுமையில் வளர்ந்தவர். கால்பந்து விளையாடுவது ஒரு ஆடம்பரமான விஷயம் என்பதால், அவரது தந்தை இந்த கனவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தன்னை கால்பந்து வீரனாக நிரூபிக்க அலிரெசா தனது இளம் வயதில் சூதாட்டத்தில் விளையாடினார். மேலும் தெரிந்த வர்களிடம் பணம் கடன் வாங்கி, வீட்டை விட்டு ஓடி, டெஹ்ரானுக்குச் (ஈரான் தலைநகர்) சென்றார். அங்கு உள்ளூர் கால்பந்து கிளப்களுக்கு வெளியே பல மாதங்கள் அவர் தெருக்களிலேயே படுத்து உறங்கி னார். பின்னர் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்து, அங்கேயே சாப்பிட்டு உறங்கி, சிறிய அளவில் வருமானம் ஈட்டினார். ‘நாப்ட் டெஹ்ரான் எப்சி’ கிளப்பில் டிரையல்ஸில் (தகுதித் தேர்வு) இருந்தபோது, சாப்பாட்டிற்கான பணத்தை ஈட்ட தெருக்களைப் பெருக்குவது, கார் வாஷில் டயர் களைக் கழுவுவது, ஆடைத் தொழிற் சாலையின் லைன்களில் வேலை செய்வது, நள்ளிரவு பீட்சா கடையில் மாவு பிசைவது போன்ற சாதாரண வேலைகளையும் செய்து, தொடர்ச்சி யாக கால்பந்து பயிற்சிகளிலும் ஈடு பட்டு வந்தார். இரட்டை கின்னஸ் உலக சாதனை நாப்ட் டெஹ்ரான் எப்சி-யின் பயிற்சியாளர்கள் அலிரெசாவின் உடலமைப்பில் ஒரு விசித்திரமான விஷயத்தைக் கவனித்தனர். மலைப்பகுதிகளில் வளர்ந்த அவர், சிறுவயதில் ஆடுகளைப் பாதுகாப்ப தற்காக கனமான கற்களை மிக நீண்ட தூரத்திற்கு எறியும் ‘தால்பரன்’ என்ற உள்ளூர் விளையாட்டு மூலம் கிடைக்கும் எரியும் திறனை கண்டு அலிரெசாவிற்கு கோல் கீப்பர் பயிற்சி வழங்கியுள்ளனர். இதன்பலனாக இன்று அலிரெசா இரண்டு வெவ் வேறு சாதனைகளுக்காக அதிகாரப் புர்வ இரட்டை கின்னஸ் உலக சாத னைப் படைத்தவராகத் திகழ்கிறார். 1. அக்டோபர் 2016இல் தென் கொரி யாவுக்கு எதிரான போட்டியின் போது அலிரெசா பந்தை வியக்கத் தக்க வகையில் 200.14 அடிகள் (61.002 மீட்டர்) தூரத்திற்கு எறிந்து கின்னஸ் சாதனை படைத்தார் (உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டம்). 2. கால்பந்து வரலாற்றிலேயே மிக நீண்ட தூரத்திற்கு உதைக்கப்பட்ட டிராப் கிக் சாதனை (ஈரான் புரோ லீக் - 2014) - 255.95 அடிகள் (78.014 மீட்டர்) . இறுதியாக 2014ஆம் ஆண்டில், தனது 21 வது வயதில் ஈரான் கால்பந்து அணியில் விளையாட அவருக்கு நிரந்தர அழைப்பு வந்தது. இன்று, அவர் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் மனதில் தனது பெயரை ஆழப் பதித்துள்ளார். - எம்.சதீஸ் குமார்