விளையாட்டு...
12 Dec 2025, 2:40 pm

மெஸ்ஸி இன்று இந்தியா வருகை கொல்கத்தாவில் 70 அடி சிலையை திறந்து வைக்கிறார்

கால்பந்து உலகின் நட் சத்திர வீரரும், அர்ஜெ ண்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி, சனியன்று இந்தி யாவிற்கு வருகிறார். மெஸ்ஸியுடன் அவரது அர்ஜெண்டினா அணியினர் உருகுவே கால்பந்து நட்சத்திரம் லூயிஸ் சுவரேஸ், அர்ஜெண்டினாவின் ரோட்ரிகோ ஆகியோரும் இந்தியாவிற்கு வருகை தர உள்ள னர். “கோட் இந்தியா டூர்” சுற்றுப் பயண பெயருடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு வரும் மெஸ்ஸி கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, தில்லி ஆகிய இடங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். 70 அடி சிலை இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு வருகை தரும் மெஸ்ஸியை வரவேற்க “ஸ்ரீ பூமி ஸ்போர்ட்ஸ் கிளப்” என்ற தனி யார் விளையாட்டு அமைப்பு லேக் டவுன் பகுதியில் பிரம்மாண்ட சிலை யை அமைத்துள்ளது. 70 அடி உய ரத்திற்கு இந்த சிலை நிறுவப் பட்டுள்ளது. சிறப்பு பைபர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக் கப்பட்ட மெஸ்ஸி சிலையை, பிரபல சிலை நுட்ப கலைஞர் மான்டி பால் மற்றும் அவரது 30 கலைஞர்கள் கொண்ட குழுவினரால் கட்டப்பட்டுள் ளது. இந்த சிலையை சனியன்று மெஸ்ஸி திறந்து வைக்க உள்ளார். ஹைதராபாத், மும்பை அதன்பின்பு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் செல்லும் மெஸ்ஸி அங்கு நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாட உள்ளார். சனியன்று மாலை பெறும் இந்த போட்டியில் மெஸ்ஸி உடன் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் விளையாட உள்ளார். அதன்பிறகு டிசம்பர் 14ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள “பேஷன் ஷோவில்” மெஸ்ஸி ரேம்ப் வாக் செய்து, தனது 2022 உலகக்கோப்பை நினைவுப் பொருட்களில் ஒன்றை ஏலம் விடு வார் என்று செய்திகள் வெளியாகி யுள்ளன. அதைத்தொடர்ந்து, தில்லி செல்லும் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதோடு, கால்பந்து வீரர்களுக்கான பாராட்டு விழாவிலும் மெஸ்ஸி கலந்து கொள்ள உள்ளார்.

செல்பி எடுக்க ரூ.10 லட்சமா?

சனியன்று மாலை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் வரும் மெஸ்ஸியுடன் ரசிகர்கள் புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசகர் பார்வதி ரெட்டி கூறுகையில்,”உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மாலை 7 மணியளவில் ரசிகர்களை மெஸ்ஸி சந்திக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியின் போது மெஸ்ஸியுடன் இணைந்து புகைப்படம் எடுக்க விரும்பும் நபர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள் ளது. மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். “தி கோட் டூர்” நிகழ்வுக்கு முன்னர், மெஸ்ஸி சனியன்று மாலை 4 மணிக்கு ஹைதராபாத் நகருக்கு வருவார். அவர் இரவு 7 மணிக்கு உப்பல் மைதானத்தை அடைவார். அவருடன் ரோட்ரிகோ டி பால் (அர்ஜெண்டினா) மற்றும் லூயிஸ் சுவரேஸ் (உருகுவே) ஆகியோரும் மைதானத்தில் இருப்பார்கள். அதன் பின், மெஸ்ஸி ஆல் ஸ்டார்ஸ் - சிங்கரேணி ஆர்ஆர்9 அணிகளுக்கு இடையிலான 20 நிமிட கால்பந்து போட்டி நடைபெறும். இந்த போட்டியில் பங்கேற்கும் 15 குழந்தைகளில், 5 பேர் பயிற்சி பெற்றவர்களாகவும், மீதமுள்ள 10 பேர் திறமையான ஆனால் பயிற்சி பெறாத ஏழை குழந்தைகள் விளைடுவார்கள். ரேவந்த் ரெட்டியும் விளையாட உள்ளார். போட்டி முடிவுக்கு பிறகு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மெஸ்ஸியை கவுரவிப்பார். அதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மெஸ்ஸி பரிசுகளை வழங்குவார். இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் டிஸ்ட்ரிக்ட் செயலியில் கிடைக்கும்”என்று அவர் தெரிவித்துள்ளார்.