தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மெஸ்ஸி ஹாட்ரிக்; அர்ஜெண்டினா அபார வெற்றி

17 Jun 2026, 9:08 pm
மெஸ்ஸி ஹாட்ரிக்;  அர்ஜெண்டினா அபார வெற்றி

மெஸ்ஸி ஹாட்ரிக்; அர்ஜெண்டினா அபார வெற்றி

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய நேரப்படி புதனன்று (செவ்வாயன்று நள்ளிரவில் தொடங்கியது) நடைபெற்ற குரூப் ஜே பிரிவுக்கான ஆட்டம் அமெரிக்காவின் கேன்சஸ் நகரில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா - அல்ஜீரியா அணிகள் மோதின. தொடக்கம் முதலே முன்களத்தில் அர்ஜெண்டினா ஆதிக்கம் செலுத்தியது. கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், கடந்த சீசனில் அர்ஜெண்டினா அணிக்காக உலகக்கோப்பை பெற்றுத் தந்த வருமான மெஸ்ஸி ஆட்டத்தின் கோல் கணக்கை (17’) துவங்கி வைத்தார். இதன்மூலம் அர்ஜெண்டினா அணி முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியிலும் மெஸ்ஸியின் பாய்ச்சல் வேகமெடுத்தது. 60 மற்றும் 76ஆவது நிமிடங்களில் மெஸ்ஸி அடுத்தடுத்து கோலடிக்க ஆட்டநேர முடிவில் அர்ஜெண்டினா 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஹாட்ரிக் கோலடித்த மெஸ்ஸி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பிரான்ஸ் அபார வெற்றி

க்கான ஆட்டத்தில் பிரான்ஸ் - செனகல் அணிகள் மோதின. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்ற இந்த ஆட்ட த்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. 2ஆம் பாதியின் 66ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர வீரர் மாப்பே கோலடித்தார். தொடர்ந்து 82ஆவது வீரர் பார்க்கோலோ கோலடிக்க பிரான்ஸ் ரசிகர்களின் ஆரவாரத்தால் நியூ ஜெர்சி மைதானம் குலுங்கியது. 90ஆவது நிமிடம் வரை செனகல் அணி கோலடிக்கவில்லை. இதனால் பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உதிரி நிமிடத்தில் (90+’5) செனகல் அணி வீரர் எம்பேயே கோலடித்தார். அடுத்து 2 நிமிடம் மீதமிருக்க மேலும் ஒரு கோலடித்து, போட்டியை டிரா செய்ய செனகல் அணி தாக்குதல் பாணி ஆட்டத்தில் இறங்கியது. எனினும் அடுத்த ஒரே நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் மாப்பே (90’6) கோலடிக்க செனகல் அணியின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இறுதியில் பிரான்ஸ் அணி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றிபெற்றது.

நார்வே கோல் மழை

குரூப் ஐ பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் நார்வே - இராக் அணிகள் மோதின. இந்த ஆட்டம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்றது. கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான நார்வே நாட்டின் ஹாலந்து ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் கோலடித்தார். பதிலுக்கு இராக் வீரர் ஹுசைன் 39ஆவது நிமிடத்தில் கோலடிக்க முதல் பாதியிலேயே ஆட்டம் பரப்பானது. அடுத்த 4 நிமிட இடைவெளியில் ஹாலந்து (43’) மேலும் ஒரு கோலடிக்க முதல் பாதியில் நார்வே 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியின் 76ஆவது நிமிடத்தில் நார்வே வீரர் ஆஸ்டிகார்ட் கோலடித்தார். ஆட்டநேர உதிரி நிமிடத்தில் (90+6’) இராக் அணிக்காக கோலடித்த வீரரான ஹுசைன், நார்வே அணிக்காகவும் சேம் சைடு மூலம் கோலடித்தார். இதன்மூலம் நார்வே அணி 4-1 என்ற கணக்கில் கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.