தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மீசநல்லூர் பெரிய ஏரியில் மணல் குவாரி அமைக்க பொதுப்பணித்துறை அனுமதி முறைகேட்டை கண்டித்து வட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு

6 Nov 2026, 12:28 am
மீசநல்லூர் பெரிய ஏரியில் மணல் குவாரி  அமைக்க பொதுப்பணித்துறை அனுமதி முறைகேட்டை கண்டித்து வட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு

மீசநல்லூர் பெரிய ஏரியில் மணல் குவாரி அமைக்க பொதுப்பணித்துறை அனுமதி முறைகேட்டை கண்டித்து வட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு

திருவண்ணாமலை, நவ.5-திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி வட்டம், தெள்ளார் ஒன்றியத்திற்கு உட்பட்ட மீசநல்லூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பெரிய ஏரியில் மணல் குவாரி அமைப்பதற்கு முறைகேடாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், பொதுப்பணித்துறையைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வந்தவாசி வட்டாரக் குழு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது, பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பெரிய ஏரியில் மணல் குவாரி அமைப்பதற்கு முறைகேடாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏரியின் நீர்வளம், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க மாநிலக் குழு உறுப்பினர்கள் பெ. அரிதாசு, வெ. நாராயணமூர்த்தி, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் வந்தவாசி வட்டாரச் செயலாளர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வந்தவாசி வட்டக்குழு உறுப்பினர் எஸ். சிவக்குமார், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் வந்தவாசி வட்டாரத் தலைவர் மோகன், வட்டாரச் செயலாளர் தங்கமணி மற்றும் மீசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.