அரசு வழக்கறிஞர் நியமனத்தில் மெரிட் முறை மட்டுமே!
1 Jun 2026, 9:34 pm
<p><strong>அரசு வழக்கறிஞர் நியமனத்தில் மெரிட் முறை மட்டுமே!</strong> </p><p>அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி சென்னை, ஜூன் 1 - சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் திங்களன்று (ஜூன் 1) சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நீதித்துறையில் அரசு வழக்கறிஞர் கள் நியமனம் முற்றிலும் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். தகுதி மற்றும் மெரிட் முறை மட்டுமே பின்பற்றப்படும் என்றும், எந்த நிலையிலும் லஞ்சம் இடம் பெறாது என்றும் அவர் கூறினார். நீதிமன்றங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும், ஏழை-எளிய மக்களுக்கு தடையின்றி நீதி கிடைக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டே அரசு செயல்படும் என்றும் அமைச்சர் விளக்கினார். உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதல்களின் படி இந்த நியமனங்கள் முறையாக இருக்கும் என்றும், இதற்கு பல்வேறு தரப்பினரி டம் இருந்து பாராட்டுகள் கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆட்சியில் உயர் பதவிகளுக்காக பணம் பெறப்பட்ட தாக குற்றச்சாட்டுகள் இருந்ததை சுட்டிக்காட்டிய அமைச் சர், திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றதாலேயே அதிமுக வில் பிளவு ஏற்பட்டதாகவும், எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்த பலர் தவெக-வில் இணைந்து வருவதாக வும் தெரிவித்தார். தவெக ஆட்சியில் அரசுப் பணி நியமனங்களுக்கு எக்காரணம் கொண்டும் லஞ்சம் பெறப்படாது என்று உறுதியளித்தார்.</p>
