பள்ளி மாணவியர்களுக்கு சுகாதார விழிப்புணர்வுகருத்தரங்கம்
21 Aug 2026, 10:14 pm
<p><strong>பள்ளி மாணவியர்களுக்கு சுகாதார விழிப்புணர்வுகருத்தரங்கம்</strong></p><p>மன்னார்குடி, ஆக. 21- தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை சார்பாக, பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கம் மன்னார்குடி தேசிய மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. </p><p>பள்ளியின் தலைமை ஆசிரியர் மு. திலகர் தலைமை வகித்தார். முதுகலை இயற்பியல் ஆசிரியர் முனைவர். எஸ். அன்பரசு முன்னிலை வகித்தார். விலங்கியல் ஆசிரியை ஜி. இளவேனில் வரவேற்றுப் பேசினார். அரசு மாவட்ட மருத்துவமனையின் சிகிச்சை மேற்பார்வையாளர் எஸ். மங்கள கணேசன், மருத்துவ உளவியல் ஆற்றுநர் வி. சத்யா, அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்புநர்கள் டி. லோகாம்பிகை, பி.சத்தியா ஆகியோர் பேசினார். மாதவிடாய் சுழற்சி, சத்து குறைபாடு, பால்வினை நோய் தொற்று, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், நீர் கட்டிகள், மார்பக புற்றுநோய் ஆகியவை பற்றியும் நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. என்.சி.சி. அதிகாரி எஸ்.திவாகர் நன்றி கூறினார்.</p>
