தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியா (தமிழ்நாடு) 2025

6 Dec 2025, 2:48 pm
ஆடவர் இளையோர்  உலகக்கோப்பை ஹாக்கி  இந்தியா (தமிழ்நாடு) 2025

ஆடவர் இளையோர்  உலகக்கோப்பை ஹாக்கி  இந்தியா (தமிழ்நாடு) 2025

இன்று அரையிறுதி ஆட்டங்கள் இறுதிக்கு முன்னேறுமா இந்தியா?

21 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் இளையோர் உல கக்கோப்பை ஹாக்கி தொ டரின், 14ஆவது சீசன் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வரு கிறது. வெள்ளியன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா, ஸ்பெயின், அர்ஜெண்டினா, ஜெர்மனி ஆகிய 4 அணிகள் அரை யிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. சென்னை ராதா கிருஷ்ணன் மைதானத்தில் நடை பெற உள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - அர்ஜெண் டினா அணிகள் பலப்பரீட்சை நடத்து கின்றன. தொடர்ந்து இதே மைதா னத்தில் நடைபெற உள்ள இரண்டா வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோது கின்றன. 7 முறை சாம்பியனான ஜெர்மனியை வீழ்த்தி, 2 முறை சாம்பியனான இந்தியா இறுதிக்கு முன்னேறுமா? என்ற எதிர்பார்ப்பில் இந்த ரசிகர்கள் ஆவலுடன் காத்தி ருக்கின்றனர்.

அரையிறுதி ஆட்டங்கள்

ஸ்பெயின்    அர்ஜெண்டினா

மாலை : 5:30 மணி

இந்தியா    ஜெர்மனி

இரவு : 8:00 மணி

இரண்டு ஆட்டங்களும் : சென்னை ராதாகிருஷ்ணன் மைதானம் சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் -1, ஜியோ ஸ்டார் (ஓடிடி)

எகிப்து, மலேசியா அபாரம்

சனியன்று நடைபெற்ற தரவரிசை ஆட்டங்கள் (கிராஸ் ஓவர் சேர்த்து) நடைபெற்றன. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நமீபியாவை 1-3 என்ற கோல் கணக்கில் கனடா அணி வீழ்த்தியது. இதே மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு தரவரிசை ஆட்டத்தில் எகிப்து அணி 8-2 என்ற கோல் கணக்கில் ஓமன் அணியை புரட்டியெடுத்தது.  சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற தரவரிசை தொடர்பான ஆட்டத்தில் ஜப்பான் அணி  3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரியா - சீனா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பெனால்டி சூட் அவுட் வரை நீண்டது. இறுதியில் ஆஸ்திரியா 1-1 (3-1) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது ஆஸ்திரியாவிற்கு 2ஆவது பெனால்டி சூட் அவுட் ஆகும். இரண்டு ஆட்டத்திலும் ஆஸ்திரியா அபார வெற்றி பெற்றது. சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியை 7-3 என்ற கோல் கணக்கில் மலேசியா வீழ்த்தியது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.