தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியா (தமிழ்நாடு) 2025

27 Nov 2025, 3:26 pm
ஆடவர் இளையோர்  உலகக்கோப்பை ஹாக்கி இந்தியா (தமிழ்நாடு) 2025

ஆடவர் இளையோர்  உலகக்கோப்பை ஹாக்கி இந்தியா (தமிழ்நாடு) 2025

இன்று தொடங்குகிறது

21 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் 14ஆவது சீசன் தமிழ்நாட்டின் முக்கிய நகரான சென்னை மற்றும் மதுரையில் வெள்ளியன்று தொடங்கி (நவம்பர் 28) டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் இந்த தொடரில், போட்டியை நடத்தும் இந்தியா உட்பட மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் மதுரை நகரில் உலகக்கோப்பை போட்டி நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.  இதனால் சென்னை, மதுரை மாநகரங்கள் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஏற்பாடுகளால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

அணிகளும்... பிரிவுகளும்... உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்றுள்ள 24 நாடுகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியா “குரூப் பி” இல் இடம்பெற்றுள்ளன.

குரூப் ஏ - ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்து குரூப் பி - இந்தியா, சிலி, சுவிட்சர்லாந்து, ஓமன் (பாகிஸ்தானுக்கு பதில்) குரூப் சி - அர்ஜெண்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா குரூப் டி - ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா குரூப் இ - நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா குரூப் எப் - பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென் கொரியா, வங்கதேசம் (நடப்பு சாம்பியன் அமெரிக்கா இந்த தொடரில் பங்கேற்கவில்லை. அதே போல கடந்த சீசனில் 2ஆம் இடம் பிடித்த சுவீடன், மூன்றாவது இடம்பிடித்த செக்குடியரசு ஆகிய அணிகளும் பங்கேற்கவில்லை)

இந்திய அணி விபரம் கோல்கீப்பர்கள் :

பிக்ரம்ஜித் சிங், பிரின்ஸ்தீப் சிங் தடுப்பாட்டம் : ரோஹித் (கேப்டன்), தலேம் பிரியோபர்தா, அன்மோல் எக்கா, அமீர் அலி, சுனில் பலக்ஷப்பா பென்னூர், ஷர்தானந்த் திவாரி பின்கள வீரர்கள் : அங்கித் பால், தௌனோஜாம் இங்கலெம்பா லுவாங், அத்ரோஹித் எக்கா, ரோசன் குஜூர், மன்மீத் சிங், குர்ஜோத் சிங் முன்கள வீரர்கள் : அர்ஷ்தீப் சிங், சௌரப் ஆனந்த் குஷ்வாஹா, அஜீத் யாதவ், தில்ராஜ் சிங் மாற்று வீரர்கள் : ரவ்னீத் சிங், ரோஹித் குலு

சேனல்: ஜியோ ஸ்டார் ஓடிடி-யில் மட்டுமே பார்க்க முடியும்... தொலைக்காட்சியில் ஒளிபரப்பு இல்லை.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.