தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆடவர் இளையோர்  உலகக்கோப்பை ஹாக்கி  இந்தியா (தமிழ்நாடு) 2025

2 Dec 2025, 4:11 pm
ஆடவர் இளையோர்  உலகக்கோப்பை ஹாக்கி  இந்தியா (தமிழ்நாடு) 2025

ஆடவர் இளையோர்  உலகக்கோப்பை ஹாக்கி  இந்தியா (தமிழ்நாடு) 2025

கோல்மழையுடன் ஹாட்ரிக் வெற்றி 13-0 காலிறுதியில் ஸ்பெயின்

21 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் இளை யோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின், 14ஆவது சீசன் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 5ஆம் நாளான செவ்வாயன்று நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் - நமீபியா (குரூப் டி : மதுரை - ரேஸ்கோர்ஸ்) அணிகள் மோதின. தொடக்கம் முதலே கோல்மழையுடன் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி 13-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, ஜெர்மனி போல ஹாட்ரிக் வெற்றியுடன் காலிறுதிக்கு கம்பீரமாக தகுதி பெற்றது. இந்த போட்டியில் நிகழ்ந்த மிக சுவாரஸ்யமான நிகழ்வு என்னவென்றால் முதல் 3 கால்பகுதியில் 8-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் முன்னிலையில் இருந்தது. ஏறக்குறைய வெற்றியை உறுதி செய்து இருந்தது. ஆனால் கடைசி கால்பகுதியில் ஸ்பெயின் வீரர்கள் என்ன நினைத்தார்களோ? அல்லது என்ன திட்டம் கொண்டு வந்தார்களோ? தெரியவில்லை. கடைசி கால்பகுதியில் 5 கோல்கள் விளாச ஸ்பெயின் அணி 13-0 என்ற கோல் கணக்கில் சூப்பர் வெற்றியை ருசித்தது.  தொடர்ந்து மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 30ஆவது லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் - எகிப்து அணிகள் (குரூப் டி) மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெல்ஜியம் அணி 10-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் சிலி - ஓமன் அணிகள் (குரூப் பி) பலப்பரீட்சை நடத்தின. முதல் கால்பகுதி மற்றும் கடைசி கால் பகுதியில் அடிக்கப்பட்ட கோல்கள் மூலம், 2-0 என்ற கோல் கணக்கில் சிலி அணி அபார வெற்றி பெற்றது.

மகளிர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி சிலி (சாண்டியாகோ) - 2025

10-0 என்ற கோல் கணக்கில் சிலியை புரட்டியெடுத்த நெதர்லாந்து

ஆடவர் பிரிவைப் போல, மகளிர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின், 11ஆவது சீசன் தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 1 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா மற்றும் போட்டியை நடத்தும் சிலி உட்பட 24 நாடுகள் பங்கேற்றுள்ளன.  இந்நிலையில், இந்த தொடரின் இரண்டாம் நாளான செவ்வாயன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் ஜப்பான் - மலேசியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து 5ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 5-2 என்ற கோல் கணக்கில் (குரூப் எப்) அமெரிக்கா வீழ்த்தியது. “குரூப் ஏ” பிரிவிற்கான 6ஆவது லீக் ஆட்டத்தில் 10-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி போட்டியை நடத்தும் சிலி அணியை புரட்டியெடுத்தது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.