ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி
11 Nov 2025, 3:41 pm

ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி

இன்னும் 15 நாட்கள்

இந்திய அணிக்கு சாதகம்?

ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் 14ஆவது சீசன் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உட்பட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரில் கலந்து கொள்ள தகுதி பெற்றிருந்த பாகிஸ்தான் அணி பஹல்காம் தாக்குதல் பிரச்சனையால் விலகியது. இதையடுத்து மாற்று அணியாக தென்மேற்கு ஆசிய நாடான ஓமன் சேர்க்கப்பட்டுள்ளது. குரூப் “பி” பிரிவில் இந்திய அணியுடன் சிலி, சுவிட்சர்லாந்து, பாகிஸ்தான் அணி இடம்பெற்று இருந்த நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலாக ஓமன் இடம்பெற்றுள்ளது. இதனால் லீக் சுற்றில் இந்திய அணி எளிதாக முன்னேறி காலிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை (1979) விட ஓமன் அணி பலம் குறைந்தவை ஆகும். அதே சமயம் சிலி, சுவிட்சர்லாந்து அணியும் ஓரளவு பார்முடன் பலம் குறைந்த அணிகள் ஆகும்.