ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியா (தமிழ்நாடு) 2025
3 Dec 2025, 2:59 pm

ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியா (தமிழ்நாடு) 2025

மதுரையில் இன்று சீனா - கனடா பலப்பரீட்சை

21 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின், 14ஆவது சீசன் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 7ஆம் நாளான வியாழனன்று 17 முதல் 24ஆம் இடங்களுக்கான ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் நமீபியா - ஆஸ்திரியா, வங்கதேசம் - ஓமன், சீனா - கனடா, தென் கொரியா - எகிப்து உள்ளிட்ட ஆட்டங்கள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்திலும், ஆஸ்திரேலியா - ஜப்பான், சுவிட்சர்லாந்து - அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா - மலேசியா, சிலி - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆட்டங்கள் சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்திலும் நடைபெறுகிறது.

நாளை காலிறுதி ஆட்டங்கள் லீக் ஆட்டங்கள் முடிவில்

இந்தியா, பெல்ஜியம், நெதர்லாந்து, அர்ஜெண்டினா, பிரான்ஸ், ஜெர்மனி, நியூஸிலாந்து, ஸ்பெயின் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. மற்ற அணிகள் பதக்க போட்டியில் இருந்து வெளியேறிவிட்டன. காலிறுதி ஆட்டங்கள் டிசம்பர் 5ஆம் தேதி சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் மட்டுமே நடைபெறுகிறது. காலிறுதி ஆட்டங்கள் ஒரே நாளில் நடைபெறும் என்ற நிலையில், இந்திய அணி தனது காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.

மகளிர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி சிலி (சாண்டியாகோ) - 2025

13-0 கோல் கணக்கில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது அர்ஜெண்டினா அதிரடி ஆட்டம்

ஆடவர் பிரிவைப் போல, மகளிருக்கும் நடத்தப்படும் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின், 11ஆவது சீசன் தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 1 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா மற்றும் போட்டியை நடத்தும் சிலி உட்பட 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், இந்த தொடரின் மூன்றாம் நாளான புதனன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் அர்ஜெண்டினா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. தொடக்கம் முதலே மிகவும் ஆக்ரோஷமாக விளையாடிய அர்ஜெண்டினா வீராங்கனைகள் சாண்டியாகோ மைதானத்தில் இடைவிடா கோல் மழை பொழிந்தனர். ஆட்டநேர முடிவில் அர்ஜெண்டினா அணி 13 - 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.