முந்தய பக்கம்

ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி துவங்கியது

28 Nov 2025, 2:28 pm
ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி துவங்கியது
<p><strong>ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி துவங்கியது</strong></p> <p>21 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின், 14ஆவது சீசன் தமிழ்நாட்டின் சென்னை மற்றும் மதுரை நகரங்களில் வெள்ளியன்று (நவ., 28) தொடங்கியது. டிசம்பர் 10 &nbsp;வரை நடைபெறும் இந்த உலகக்கோப்பை தொடரின், தொடக்க ஆட்டங்கள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வெள்ளியன்று காலை 9 மணியளவில் துவங்கின. தொடக்க ஆட்டங்களை தமிழ்நாடு வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை &nbsp;அமைச்சர் பி.மூர்த்தி, ஹாக்கி இந்தியா பொதுச்செயலாளர் போலாநாத் சிங், மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 11.15 மணிக்கு தொடங்கிய 2-வது ஆட்டத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயனும், 3-ஆவது ஆட்டத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன் ஆகியோரும், 4-ஆவது ஆட்டத்தை மதுரை மேயர் (பொ) தி. நாகராஜன், ஆ.வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோரும் துவக்கி வைத்தனர். &nbsp;சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்திலும் லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram