விளையாட்டு
6 Feb 2026, 3:38 pm

ஆடவர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், 10ஆவது சீசன் ஆடவர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சனியன்று இந்தியா - இலங்கையில் கோலாகலமாகத் தொடங்குகிறது. இதில் இந்தியாவில் சென்னை, அகமதாபாத், தில்லி, மும்பை, கொல்கத்தா என 5 மைதானங்களிலும், இலங்கையில் கொழும்பு (2 மைதானங்கள்), கண்டி என 3 மைதானங்களிலும் நடைபெறுகிறது. மொத்தம் 55 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் நாளில், 3 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் 3ஆவது ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்காவை (மும்பை - மகாராஷ்டிரா) எதிர்கொள்கிறது.

அணிகளும்... பிரிவுகளும்...

குரூப் ஏ - இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா குரூப் பி - ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் குரூப் சி - இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, நேபாளம், இத்தாலி குரூப் டி - நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு அமீரகம்

சுற்றுகள் எப்படி?

மொத்தம் 20 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. ஒரு குரூப்பிற்கு 5 அணிகள் வீதம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் போட்டி முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் “சூப்பர் 8” சுற்றுக்கு முன்னேறும். “சூப்பர் 8” சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி முடிவில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிக்கு முன்னேறும்.

தமிழ்நாட்டில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டி

தமிழ்நாட்டின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. பிப்.,8 (ஞாயிறு) - நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் (காலை 11:00 மணி) பிப்.,10 (செவ்வாய்)-நியூஸிலாந்து - ஐக்கிய அரபு அமீரகம் (மதியம் 3:00 மணி) பிப்.,13 (வெள்ளி)-அமெரிக்கா - நெதர்லாந்து (இரவு 7:00 மணி) பிப்.,15 (ஞாயிறு)-அமெரிக்கா - நமீபியா (மதியம் 3:00 மணி) பிப்.,17 (செவ்வாய்)-நியூஸிலாந்து - கனடா (காலை 11:00 மணி) பிப்.,19 (வியாழன்)-ஆப்கானிஸ்தான் - கனடா (இரவு 7:00 மணி) பிப்.,26 (வியாழன்)-சூப்பர் 8 சுற்று (இரவு 7:00 மணி)

டிக்கெட் தேவைக்கு https://in.bookmyshow.com/explore/c/icc-mens-t20-world-cup-2026 மற்றும் https://tickets.cricketworldcup.com/explore/c/icc-mens-t20-world-cup-2026 என்ற தளங்களில் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

இன்றைய ஆட்டங்கள்

பாகிஸ்தான் - நெதர்லாந்து இடம் : கொழும்பு, இலங்கை நேரம் : காலை 11:00 மணி மேற்கு இந்தியத் தீவுகள் - ஸ்காட்லாந்து இடம் : கொல்கத்தா, மேற்குவங்கம் நேரம் : மதியம் 3:00 மணி இந்தியா - அமெரிக்கா இடம் : மும்பை, மகாராஷ்டிரா நேரம் : இரவு 7:00 மணி