முந்தய பக்கம்

ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி சென்னை - மதுரை 2025

18 Nov 2025, 3:21 pm
ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி சென்னை - மதுரை 2025

ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி

சென்னை - மதுரை 2025

இன்னும் 8 நாட்கள்

தஞ்சாவூரில் வெற்றிக்கோப்பைக்கு உற்சாக வரவேற்பு

21 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் (14 ஆவது சீசன்) தமிழ்நாட்டின் முக்கிய நகரான சென்னை மற்றும் மதுரையில் நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பையை முன்னிட்டு, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி முதல் சென்னை வரை அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிக்கோப்பை சுற்றுப்பயணம் செய்து காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வெற்றிக்கோப்பை வருகை தந்தது. தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெற்றிக்கோப்பையை  வரவேற்றனர். இந்நிகழ்வில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் மரு.அஞ்சுகம்பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் வெ.பேபி, தஞ்சாவூர் ஹாக்கி கழக தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம்,  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெ.டேவிட் டேனியல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram