ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி
17 Nov 2025, 3:10 pm

ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி

திண்டுக்கல்லில் வெற்றிக்கோப்பையை ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., வரவேற்றார்

21 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் இளை யோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் (14 ஆவது சீசன்) தமிழ்நாட்டின் முக்கிய நகரான சென்னை மற்றும் மதுரையில் நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஏற்பாடுகள் 90% நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது ஹாக்கி வெற்றிக்கோப்பை சுற்றுப்பயணம் தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வரவேற்றார். திண்டுக்கல் புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன், மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, ஹாக்கி சங்கத்தலைவர் காஜாமைதீன், கால்பந்து சங்க செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வெற்றிக் கோப்பையை வரவேற்றனர்.