முந்தய பக்கம்

வழக்கறிஞர் வி.அஜய் கோஷ் நினைவேந்தல் நிகழ்ச்சி

2 Mar 2026, 3:30 pm
வழக்கறிஞர் வி.அஜய் கோஷ்  நினைவேந்தல் நிகழ்ச்சி
<p><strong>வழக்கறிஞர் வி.அஜய் கோஷ் &nbsp;நினைவேந்தல் நிகழ்ச்சி</strong></p> <p>சென்னை, மார்ச் 2- &nbsp;மறைந்த மூத்த வழக்க றிஞர் வி.அஜய் கோஷ் நினைவேந்தல் கூட்டம் பல்கலைக்கழக ஆசிரி யர்கள் சங்கம் சார்பில் ஞாயி றன்று (மார்ச் 1) சென்னை யில் நடைபெற்றது. ஆர்.சரவணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.ராஜா வரவேற்றார். முன்னாள் நீதிபதி து.அரி பரந்தாமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராம கிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மூ.வீர பாண்டியன், மூத்த வழக்க றிஞர் பாலன் அரிதாஸ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், பார் கவுன்சில் உறுப்பினர் எம்.வேல்முரு கன், வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணசாமி, சி.விஜய குமார் ஆகியோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர். பொருளாளர் பேராசிரியர் கே.சையத் அகமது கபீர் நன்றி கூறினார். பின்னர் பணிநிறைவு பெற்ற (2024 - 2025 &amp; 2025 - 2026ஆம் கல்வியாண்டுகள்) ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. &nbsp;கல்லூரி கல்வி இயக்கக டாக்டர் சி.ஜோதி வெங்க டேஸ்வரன், பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் இயக்குனர் ஜி.திருவாசகம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram