முந்தய பக்கம்

சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயலாளர்  எஸ்.தயாநிதி நினைவேந்தல் நிகழ்வு

31 Mar 2026, 4:50 pm
சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயலாளர்  எஸ்.தயாநிதி நினைவேந்தல் நிகழ்வு
<p><strong>சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயலாளர் &nbsp;எஸ்.தயாநிதி நினைவேந்தல் நிகழ்வு</strong></p> <p>வேலூர், மார்ச் 31 &ndash; மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வேலூர்-திருப்பத்தூர் மாவட்டக் குழுவின் முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.தயாநிதி படத்திறப்பு- நினைவேந்தல் நிகழ்வு காட்பாடியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.காத்தவராயன் தலை மையில் நடைபெற்றது. தோழர் தயாநிதியின் உருவப்படத்தை மூத்த தோழர் வே.மீனாட்சி சுந்தரம் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினார். பின்னர் நடைபெற்ற நினைவேந்தல் &nbsp;மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, கே.ஆறுமுகநயினார், முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர்கள் ப.சுந்தர்ராஜன், அ.பாக்கியம், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் இரா.லெனின், விச மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் செயலாளர்கள் என்.காசி நாதன், &nbsp;இ.சங்கர், லட்சுமணன் (திருவண்ணா மலை),வேலூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் வேலூர் மக்களவை உறுப்பினருமான து.மு.கதிர்ஆனந்த், &nbsp;விசிக மாவட்ட செயலாளர் பிலிப், மதிமுக மாவட்ட செயலாளர் ஜி.கோபி, திக மாவட்ட செயலாளர் சிவக்குமார் &nbsp;கலந்து கொண்டனர். அரங்கத்தின் வாயிலில் தோழர் தயாநிதி நினைவை கூறும் வகையில் புகைப்படக் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. நிறை வாக தோழரின் பணிகளை விவரிக்கும் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காணொலி ஒளிபரப்பு செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram