முந்தய பக்கம்

மாவீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்..

24 Mar 2026, 3:23 pm
மாவீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்..

மாவீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்..

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோரின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா, அரக்கோணம் ஏபிஎம் சர்ச், வாலாஜா தாலுகா, சீனிவாசன் பேட்டை கிளை, கலவை தாலுகா, மேலப்பழந்தை கிராமம் பகுதியில்  மாவீரர்களின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரது நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிறன்று (மார்ச் 22) தரமணியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேளச்சேரி பகுதி, தந்தை பெரியார் நகர் கிளைத் தலைவர் எபி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் தென்சென்னை மாவட்டத் தலைவர் என்.குமரன், செயலாளர் தீ.சந்துரு, மாநிலக்குழு உறுப்பினர் நிவேதா,  பகுதிச் செயலாளர் பூவரசன், பொருளாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவீரன் பகத்சிங் 95ஆவது நினைவு தினத்தையொட்டி ஆவடியில் வடசென்னை மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.வெங்கடேசன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் நிதிஷ், எஸ்.ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram