இலவச தொகுப்பு வீடு கோரி சாட்டையடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு
24 Feb 2026, 3:55 pm
<p><strong>இலவச தொகுப்பு வீடு கோரி சாட்டையடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு</strong></p>
<p>ராணிப்பேட்டை, பிப். 23: நெமிலி வட்டம், கரிவேடு மேல் இந்திரா நகர் காலனி பகுதியில் வசிக்கும் சாட்டையடி சமூகத்தைச் சார்ந்த மக்கள், தங்களுக்கு அரசு இலவச தொகுப்பு வீடுகள் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கரிவேடு பகுதியில் வசிக்கும் இந்த சமூகத்தைச் சேர்ந்த 43 குடும்பங்களில், 32 குடும்பங்களுக்கு ஏற்கனவே அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், மீதமுள்ள 11 குடும்பங்கள் கடந்த பல ஆண்டுகளாக வீடின்றி தவித்து வரு கின்றனர். தமக்கும் இலவச தொகுப்பு வீடு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர். பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் பொதுமக்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்த நிலையில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி பேச்சுவார்த்தை நடத்தி யதைத் தொடர்ந்து மனு அளிக்க அனுமதி வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 11 குடும்பங் களுக்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து வீடு களை வழங்க வேண்டும் என ரகுபதி கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிகழ்வின் போது எல்.சி. மணி, மோகன்ராஜ், ஏ.பி.எம். சீனிவாசன், பாதர் பிரேம்குமார், விசிக பெல் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
