தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பயிர் காப்பீடு கணக்கீட்டு குழுவில் விவசாயியை சேர்க்க வேண்டும்

31 Dec 2025, 3:37 pm
பயிர் காப்பீடு கணக்கீட்டு குழுவில் விவசாயியை சேர்க்க வேண்டும்

பயிர் காப்பீடு கணக்கீட்டு குழுவில் விவசாயியை சேர்க்க வேண்டும்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சிவகங்கை, டிச.31- சிவகங்கை மாவட்டத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்துள்ள 68,000 விவசாயிகளுக்கும் காப்பீட்டு தொகை முழுமையாக கிடைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு பணிகளில், ஒரு விவ சாயியை அந்தக் குழுவில் சேர்க்க  வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் வீரபாண்டி வலியுறுத்தினார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புத னன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி யர் பேசுகையில், “தமிழக முதல மைச்சர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்  டங்களை செயல்படுத்தி வருவதாக வும், விவசாயிகளின் அடிப்படை தேவைகள் மற்றும் வேளாண் பணி கள் இடையூறு இன்றி நடைபெற வேண்டும் என்பதற்காக ஒவ் வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்  தப்பட்டு வருவதாகவும் தெரி வித்தார். சிவகங்கை மாவட்டத்தில் பயிர்  காப்பீட்டு தொகை வழங்குதல், சிப்  பம் கட்டும் அறைகள் அமைத்தல்,  விவசாய இயந்திரங்கள் வழங்கு தல், ஆழ்துளை கிணறுகள், சோலார் பம்ப்செட் அமைத்தல், மின் விநியோகத்தை சீரமைத்தல், வங்கிக் கடனுதவி மூலம் வேளாண்  தொழில் மேம்பாடு, உரங்கள் போதிய இருப்பில் வைப்பது, வன  விலங்குகளால் ஏற்படும் சேதத் தைத் தடுப்பது உள்ளிட்ட பல் வேறு பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் நட வடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வரு வதாகவும், விவசாயிகளின் கோரிக்  கைகள் முழுமையாக நிறைவேற் றப்பட வேண்டும் எனவும் ஆட்சி யர் அறிவுறுத்தினார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி பேசுகையில், சிவகங்கை மாவட்  டத்தில் விவசாயம் பொய்த்துப் போய் வறட்சியால் விவசாயிகள்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாகக் குறிப்பிட்டார். பயிர் காப்பீடு  பதிவு செய்துள்ள 68,000 விவசாயி களுக்கும் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும், கணக்  கீட்டு பணியில் விவசாயி ஒருவரை குழுவில் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் “அதன் படி செயல்படுவோம்” என பதில ளித்தார். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள சீமை கருவேல் மரங்களை அகற்ற வேண்டும், சிவகங்கை அருகே இலுப்பகுடி பகுதியில்  கிராபைட் கனிமம் எடுப்பதற்கு தனி யாருக்கு அனுமதி வழங்கக் கூடாது, பிற்படுத்தப்பட்ட நலத் துறை கடன் பெற்று கிணறு தோண்  டிய விவசாயிகளுக்கு  மின் இணைப்பு வழங்க வேண்டும் என   வீரபாண்டி வலியுறுத்தினார். இக்கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதி யளித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் எஸ்.செல்வசுரபி,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் திட்ட இயக்குநர் ஜி.அரவிந்த்,  இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், இணை இயக்குநர் (வேளாண்மை) சு.சுந்தரமகாலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  (வேளாண்மை) தனலெட்சுமி உள்  ளிட்ட பல்வேறு துறை அலுவலர் கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.