மேலூர் அருகே கோர விபத்து: 6 பேர் பலி! ஆம்னி பேருந்து, அரசுப் பேருந்து மீது மோதல்
13 Jul 2026, 9:59 pm

மேலூர் அருகே கோர விபத்து: 6 பேர் பலி! ஆம்னி பேருந்து, அரசுப் பேருந்து மீது மோதல்

மதுரை, ஜூலை 13 - கொட்டாம்பட்டி அருகே சொகுசுப் பேருந்து, அரசு பேருந்து மீது மோதிய விபத்தில் ஒரு பெண் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 41 பேர் காயமடைந்த நிலையில், அவர் கள் சிகிச்சைக்காக மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் நான்கு வழிச்சா லையில், திங்கட்கிழமை (ஜூலை 13) அதிகாலை சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி கே.எம்.ஆர். டிரான்ஸ் (KMR Tranz) எனும் தனி யார் ஆம்னி பேருந்து சென்று கொண் டிருந்தது.

கீழ் மற்றும் மேல்தள படுக்கை வசதி கொண்ட இந்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பைக் கடந்து எதிர் திசையில் வாகனங்கள் செல்லும் சாலையில் நுழைந்துள்ளது. பின்னர், திருச்சிராப்பள்ளி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது, வேகமாக மோதி, பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அரசுப் பேருந்து மீது மோதிய வேகத்திலேயே, ஆம்னி பேருந்தானது மீண்டும் இடது புறம் வஞ்சிநகரம் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடையில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், இந்த விபத்தில், அரசுப் பேருந்தில் பயணித்த 3 பேர், ஆம்னி பேருந்தில் பயணித்த 2 பேர், நிழற்குடையில் உறங்கிக் கொண்டி ருந்த ஒருவர் என 6 பேர் பலியாகினர். பலியானவர்கள், பாளையங் கோட்டையைச் சேர்ந்த சிறியபுஷ்பம் (56), திருச்சி எடமலைபட்டியை சேர்ந்த ஆனந்தராஜ் (46), திருச்சி போலீஸ் காலனியை சேர்ந்த சூர்யா (29) திருவா ரூரைச் சேர்ந்த முகமது யாசின் (60), திசையன்விளையைச் சேர்ந்த ஆபிர காம் (40), மதுரை வஞ்சிநகரத்தைச் சேர்ந்த பெருமாள் (71) என்பது அடை யாளம் காணப்பட்டுள்ளது.

காயம் அடைந்த 41 பேர் மேலூர் அரசு மருத்துவமனையிலும், படுகா யம் அடைந்தவர்கள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் அனு மதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு வந்த காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) அபினவ் குமார், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் மீட்புப் பணிகளை விரைவு படுத்தினர். மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

சு. வெங்கடேசன் எம்.பி. நேரில் ஆறுதல்

விபத்து குறித்து தகவல் அறிந்த தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உடனடி யாக மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்குத் தேவையான சிகிச்சை உரிய முறை யில் கிடைப்பதை உறுதி செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் வலி யுறுத்தினார்.

நிவாரண நிதியை உயர்த்தி வழங்க அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

கொட்டாம்பட்டி அருகே நடந்த கோரமான சாலை விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை விடுத்துள்ளார். அதில், “விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங் களுக்கு தலா ரூ. 3 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெறும் 7 பேருக்கு தலா ரூ. 1 லட்சமும், சிறு காயமடைந்த 15 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தர விட்டுள்ளார். எனினும், இச்சம்பவத்தின் தீவிரத்தன்மையையும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் வாழ்வா தார இழப்பையும் கருத்தில் கொண்டு, அரசு அறிவித் துள்ள நிவாரணத் தொகையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது” என்று தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும், “இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழா மல் இருக்க, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளையும், தனியார் பேருந்து நிறுவனங்களின் இயக்கம் தொடர் பான கண்காணிப்பையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்”; என்று வலியுறுத்தப்பட்டு இருப்பதுடன், “உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்க லையும், காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் என்ற விழைவையும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள் கிறோம்” என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.