மேலே... மேலே... பறக்கலாம்... - மு.முருகேஷ்
13 Jun 2026, 8:05 pm

மேலே... மேலே... பறக்கலாம்... - மு.முருகேஷ்

அந்தப் பரந்த வெளியில் நடந்து போனாள் புவனா.

அதுவொரு விமான ஓடுதளம். விமானத் தில் பயணிகள் ஏறிக்கொண்டு இருந்தனர். விமானத்தின் இன்னொரு புறத்தில் பயணி களின் பொருள்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

எல்லோரும் ஏறியதும் கதவு மூடப்பட் டது. விமானத்தின் இரு பக்கமும் இருந்த விசிறிகள் வேகமாகச் சுற்றத் தொடங்கின. விமானம் மெதுவாக நகர்ந்தது. இதையெல்லாம் பார்த்தபடியே ஓடு தளத்தில் நடந்துவந்தாள் புவனா. கொஞ்ச தூரம் ஓடிய விமானம், மேலெ ழுந்தது. அப்படியே ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது.

இதைப் பார்த்த புவனாவும் ஓடத் தொடங் கினாள். ஓடும்போதே இரு கைகளையும் இறக்கை போல் விரித்துக் கொண்டாள். பிறகு தரையிலிருந்து கால்கள் மேலே எழுந் தன. அப்படியே மேலெழுந்து பறக்கத் தொடங்கினாள். விமானத்தைப் பின்தொடர்ந்தாள் புவனா.

சின்னப் பெண்ணொருத்தி, உடன் பறந்து வருவதைப் பயணிகள் அதிசய மாகப் பார்த்தனர். பயணிகளைப் பார்த்து கையை ஆட்டினாள் புவனா, மேலே பறந்து கொண்டிருந்த விமானம் மெல்ல இடவலமாக அசைந்து ஆடியது. அந்த ஆட்டம் கூடிக்கொண்டே போனது. ‘அட... என்னாச்சு..?’

விமானி பரபரப்பானர். உடனே தகவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள முயன்றனர். தொடர்பு கிடைக்க வில்லை. அதற்குள் பயணிகள் பயந்து போயினர். “ஏன் விமானம் இப்படி ஆடுது..?’ பயணிகள் குழப்பத்தோடு கண்களை மூடிக் கொண்டு, பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். குழந்தைகள் விவரம் புரியா மல் அழுதனர்.

ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பது மட்டும் தெரிந்தது. இதைக் கவனித்த புவனா, “ஒருபோ தும் ஏதும் அசம்பாவிதம் நடக்க நான் விடமாட்டேன்…” என்று உறுதியாகச் சொன்னாள். அப்படியே வேகமாகப் பறப் பதை நிறுத்தி, பூமியில் குதித்தாள். ‘பொத்’தென்று தரையில் விழுந்தாள். சிறிய கட்டிலில் இருந்து கீழே விழுந் ததால் புவனாவுக்கு அடிபடவில்லை.

அதை விட முக்கியம்… புவனா கீழே விழுந்ததை அவளது தம்பி பார்க்கவில்லை. பார்த்து இருந்தால் போச்சு! “அம்மா… இன்னிக்கும் அக்கா கனவு கண்டுட்டு, கீழே விழுந்துட்டா..!” என்று சொல்லிச் சிரிப்பான் தம்பி சுரேந்தர். “என்னாச்சும்மா..?” என்று பதறிக் கொண்டே ஓடி வருவார் அம்மா. “ஏம்மா,எப்பவுமே அதே நினைப்புலே இருக்கே. இப்ப கீழே விழுந்துட்டே பாரு..!

” என்று ஆறுதலாகக் கேட்டார். “ஏம்மா, நானும் அதை மறந்துட்டுத் தான் தூங்குறேன். ஆனா, எப்படியோ எனக்கு கனவிலே வந்திடுதும்மா…” என்று சிணுங்கி னாள் புவனா. “புவனா, நம்ம மனசிலே எது ரொம்ப ஆழமாகப் பதிஞ்சுப் போயிருக்கோ, அது தான் நாம தூங்கும்போது கனவா வரு துன்னு நேத்து ஒரு புக்லே படிச்சேன்…” என் றார் அம்மா.

“ஓ… அப்படியா..? இந்தப் ‘பகல்ல காணுற கனவு கண்டிப்பா பலிக்கும்’னு சொல்றாங்களே, அது உண்மையாம்மா..?” ஆர்வத்தோடு கேட்டாள் புவனா.

“அதெல்லாம் சும்மா சொல்றது. நாம நினைச்சது நடக்கணும்னா, வெறும் கனவு கண்டுக்கிட்டு இருந்தா மட்டும் போதாது. அதை அடைய நாம அதற்கான முயற்சி யையும் தொடர்ந்து விடாம செய்யணும்..!” அம்மா சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஆனால், அம்மா சொன்ன வார்த்தைகள் மட்டும் புவனாவைச் சுற்றி அலைந்து கொண்டேயிருந்தன. காலையில் எழுந்து குளித்து, சீருடை அணிந்து, பள்ளிக்குச் சென்றாள் புவனா. பள்ளியில் உணவு இடைவேளை நேரம்.

தனது பள்ளி நூலக அட்டையை எடுத் தாள். நூலகத்தை நோக்கிச் சென்றாள். பெரிய நூலகமொன்று பள்ளியில் இருந் தது. வரிசையில் இருந்த எல்லா நூல்களும் புவனாவைப் பார்த்து கைநீட்டி, ‘என்னைப் படி’யென அழைப்பது போலிருந்தது.

‘பொறுங்க… ஒவ்வொருத்தரையா வந்து படிக்கிறேன்…’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். பள்ளி நூலகப் பொறுப்பாசிரியரிடம் போனாள். “என்ன புக் வேணும்மா..?” என்று கேட் டார். புவனா சொன்னாள்.

“அதோ… அந்த ஆறாவது வரிசை யிலே நாலாவது அடுக்கிலே இருக்கு..!” என்றார். அங்கே சென்று, அந்த நூலை எடுத்தாள். புவனாவின் முகத்தில் புதிய ஒளியொன்று படர்ந்தது. பதிவேட்டில் நூலைப் பதிந்தாள். வகுப்பறை நோக்கி ஓடிவந்தாள் புவனா.

பள்ளிக்கூட மணி அடித்தது. ஆசிரியர் அரங்கநாதன் வந்தார். “நேத்து உங்களை எல்லாம் கேட்டு இருந்தேனா… என்ன ஞாபகம் இருக்கா..?” என்று தொடங்கினார் அரங்கநாதன். “ம்ம்… ஞாபகம் இருக்கு… சார்…” எல்லோரும் ஒன்றாகச் சொன்னார்கள். “இப்ப ஒவ்வொருத்தரா படிச்சு என்ன வாகப் போறேன்னு சொல்லுங்க… பார்க் கலாம்” என்றார்.

மாணவர்கள் ஒவ்வொருவராகச் சொல்லத் தொடங்கினர். புவனா எழுந்தாள். “சார்… நல்லா படிச்சு நான் விமான ஓட்டி யா… பைலட்டா ஆகணும்… சார்” என் றாள். மாணவர்கள் கைகளை உயர்த்தி, ‘உஸ்ஸ்ஸ்…’ என்று பறப்பது போல் செய் தனர்.

பிறகு கைகளைத் தட்டினார்கள். அனைவரும் சொன்னதை அமைதியாகக் கேட்டார் அரங்கநாதன். “படிக்கிற இந்த வயசிலேயே நீங்க எல்லாரும் பெரிய கனவுகளோடு இருக் கீங்க. அதை நோக்கிய உங்களோட முயற்சி யை இப்போதே தொடங்குங்க.

நீங்கள் நினைத்த வெற்றியை நிச்சயம் அடைவீர் கள். ஆல் த பெஸ்ட்…” என்று சொல்லி விட்டுச் சென்றார் அரங்கநாதன். நூலகத்திலிருந்து எடுத்து வந்த நூலைக் கையில் எடுத்தாள் புவனா. தன் மேசை மீது வைத்தாள். அந்த நூலின் தலைப்பை மனதிற்குள் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டாள்.

‘பைலட் ஆவது எப்படி..?’ இரு கைகளையும் பக்கவாட்டில் அகல மாக விரித்தாள். புவனாவுக்கு இப்போது இரு கைகளும் சிறகுகளைப் போல அகலமாக நீண்டு இருந் தன. வானம் கைக்கெட்டிய தூரத்தில் இருப்பது போன்ற உணர்வு புவனாவுக்கு உண்டானது.