தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேலவளவு தியாகிகளின் 29ஆம் ஆண்டு நினைவுதினம் சிபிஎம் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி வீரவணக்கம்!

30 Jun 2026, 9:04 pm
மேலவளவு தியாகிகளின் 29ஆம் ஆண்டு நினைவுதினம் சிபிஎம் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி வீரவணக்கம்!

மேலவளவு தியாகிகளின் 29ஆம் ஆண்டு நினைவுதினம் சிபிஎம் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி வீரவணக்கம்!

​மதுரை, ஜூன் 30 - ​மேலவளவு தியாகிகளின் 29-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் குரல் கொடுத்து, தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளைப் போற்றும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் செவ்வா யன்று (ஜூன் 30) காலை 10 மணிக்கு மேலவளவில் வீரவணக்கம் செலுத்தப் பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சு. வெங்க டேசன் எம்.பி., கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் தலைவர் டி. செல்லக்கண்ணு ஆகியோர், மேலவளவு தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீர வணக்கம் மற்றும் புகழஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கு, சிபிஎம் மேலூர் தாலுகா செயலாளர் ஏ. தனசேகரன் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எம். கண்ணன் வர வேற்றார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர்கள் எஸ். பாலா, எஸ்.கே. பொன்னுத் தாய், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநகர் மாவட்டத் தலைவர் எம். பாலசுப்பிர மணியன், மதுரை புறநகர் மாவட்டச் செய லாளர் செ. முத்துராணி, மாவட்ட பொரு ளாளர் பி. மகாலிங்கம், மாநகர் மாவட்ட செயலாளர் மாரிக்கனி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பி.எஸ். ராஜாமணி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். என். விஸ்வநாதன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.