முந்தய பக்கம்

மேலப்பாளையம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

26 May 2026, 9:58 pm
மேலப்பாளையம் சந்தையில்  ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
<p><strong>மேலப்பாளையம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை</strong></p><p>திருநெல்வேலி, மே 26- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் மாநக ராட்சி கால்நடை சந்தையில் செவ்வாய்க்கிழ மையன்று காலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு வாங்குவதற்கு குவிந்தனர். மதுரை, கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக அதிகளவு கொண்டு வந்திருந்தனர். குறிப்பாக நெல்லை ஆட்டு சந்தையில் செம்மறி வகையான பொட்டு குட்டி, செங்குட்டி, மகிழம்பாடி உள்ளிட்ட ஆடு வகைகளும், வெள்ளாட்டு வகையில் கருப்பு கிடா, கொடியாடு, பல்லையாடு உள்ளிட்ட வகைகள் என சுமார் 2,500 -க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டி ருந்தன. செங்கிடா, பூநாரை உள்ளிட்ட ஆடுகள் ரூ.45 ஆயிரம் வரை விலை போனது. மற்றவை எடை, தோற்ற அடிப்படையில் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதிக எடை கொண்ட கருப்பு நிற செம்மறி கிடா ஒன்று ரூ.40 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. திருமங்கலத்தில் இருந்து வந்த ஆடு ஒன்று ரூ.55 ஆயிரத்துக்கு விலை போனது. ஆட்டுச் சந்தையில் சுமார் ரூ. 5 கோடி வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram