முந்தய பக்கம்

மேல் காவனூர் பள்ளியில் சாதனை மாணவிகளுக்குப் பாராட்டு விழா!

17 Jun 2026, 10:32 pm
மேல் காவனூர் பள்ளியில் சாதனை மாணவிகளுக்குப் பாராட்டு விழா!

மேல் காவனூர் பள்ளியில் சாதனை மாணவிகளுக்குப் பாராட்டு விழா!

வேலூர், ஜூன் 17- கே.வி.குப்பம் அடுத்த மேல் காவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து, தற்போது கே.வி.குப்பம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்குப் பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நடை பெற்றது. இத்தேர்வில் பள்ளி அளவில் ஸ்ரீ மோகனப் பிரியா (432 மதிப்பெண்கள்), ஏ.கோபிகா (430 மதிப்பெண்கள்), என்.மதுமிதா (420 மதிப் பெண்கள்) ஆகியோர் சாதனை படைத்துள் ளனர். தலைமை ஆசிரியர் ஸ்ரீமதி தலைமை யில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, முன்னாள் மாணவர்களான சே.பூபாலன் (வழக்கறிஞர்), கு.ராஜா (தமிழ்நாடு காவல் துறை) மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஜெய காந்தன், மணிவேல், தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலு வலர்கள் சுமதி, சுடர்கொடி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு மாணவிகளுக்குப் பரிசுகளையும், ஜெய காந்தன் வழங்கிய ஊக்கத்தொகையையும் வழங்கிப் பாராட்டினர். இதில் முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram