தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு அணை முயற்சியை தடுத்து நிறுத்தாத ஒன்றிய பாஜக அரசு

29 May 2026, 9:50 pm
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு அணை முயற்சியை தடுத்து நிறுத்தாத ஒன்றிய பாஜக அரசு

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு அணை முயற்சியை தடுத்து நிறுத்தாத ஒன்றிய பாஜக அரசு

தஞ்சாவூர், மே 29 - தமிழ்நாட்டின் உணவு ஆதாரமாக விளங்கும் டெல்டா மாவட்ட விவ சாயத்தை அழிக்கும் வகையில், கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் மேகதாது அணைக் கட்டுமான நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு தடுத்து நிறுத்த வலி யுறுத்தி, இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி, இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: பெ. சண்முகம் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக செய்தி யாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம், மேகதாது பகுதியில் புதிய அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவ தாகக் குற்றம் சாட்டினார்.

அணை கட்டப் பட்டால் தமிழகத்தின் நெற்களஞ்சிய மான டெல்டா மாவட்டங்களில் விவசாய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

2018-ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டிய அவர், மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகள் அனைத்தும் தேசிய சொத்து என்றும், அதில் எந்தவொரு தனி மாநில மும் முழு உரிமை கொண்டாட முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக அறி வித்துள்ளதை நினைவு கூர்ந்தார்.

இந்தத் தீர்ப்பை அடுத்த 15 ஆண்டு களுக்கு மாற்ற முடியாது என அறுதி யிட்டு கூறப்பட்டுள்ள சூழலில், அதற்கு விரோதமாகக் கர்நாடக முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் கருத்துக்களை வெளியிடுவது வன்மையான கண்ட னத்திற்கு உரியது என்றார்.

நான்கு மாநி லங்களின் அனுமதி இல்லாமல் காவிரி யில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாது என்ற விதியை மீறி, திட்ட அறிக்கை தயாரிப்பதும், பூமி பூஜை போடுவதும் இரு மாநில மக்களிடை யேயான நல்லுறவைக் கெடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்று அவர் விவரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மாநில உரி மைகள் மற்றும் தமிழக நலன்கள் சார்ந்த இந்த விவகாரத்தில் யார் ஆட்சி யில் இருந்தாலும் சரி, தமிழக அரசு எவ்வித ஊசலாட்டமும் சமரசமும் இன்றி உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். தற்போது உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்துள்ள நிலை யில், அடுத்தகட்டமாகச் சட்ட வல்லுநர் களுடன் கலந்தாலோசித்து, புதிய சீராய்வு மனு தாக்கல் செய்வதா அல்லது தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகுவதா என்பது குறித்து அரசு விரைந்து ஆலோசிக்க வேண்டும் என்றார். மேலும், காவிரியையும் தமிழ கத்தின் உரிமையையும் பாதுகாக்கத் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை களைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த 12 ஆண்டுகளாகத் தமிழ் நாட்டைப் பாரபட்சமான கண்ணோட்டத் துடன் பார்க்கும் ஒன்றிய பாஜக அரசு, இந்தப் பிரச்சினையிலாவது உச்சநீதி மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை உணர்ந்து, அனைத்து மாநி லங்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

முந்தைய அரசுகளின் வழிமுறையைத் தொடர வேண்டும்: மு. வீரபாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேக தாது அணை கட்டப்படும் பட்சத்தில் அது இரு மாநிலங்களின் நீண்டகால நட்பை யும், தொன்மையான பண்பாட்டு உறவு களையும் கேள்விக்கு உள்ளாக்கும் என்றார்.

இது வெறும் நீர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு சம்பந்தப்பட்ட விவ காரம் என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழ கம் நீருக்கு ஏங்கும் மாநிலமாகவும், கர்நாடகம் நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்ட மாநிலமாகவும் இருப்பதால், தன்னிச்சையாக நீரைத் தேக்கக் கூடாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

காவிரி நீர் தொடர்பாகத் தீர்ப்பாயம், நீதிமன்றம், ஒழுங்காற்றுக்குழு எனப் பல்வேறு அமைப்புகள் காட்டிய வழி காட்டுதல்களை மதிக்காமல், அடாவடி யாக அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு கூறுவது தமிழ் மக்களின் மீதும், இந்திய அரசியல் சாசனத்தின் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல் என்று அவர் சாடினார்.

நீதிமன்ற உத்தரவுகளை மீறி அணை கட்டப்பட்டால் நாட்டின் இறையாண்மையே கேள்விக் குறியாகும் என்பதால், கர்நாடக ஆட்சி யாளர்கள் மிகுந்த நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வீர பாண்டியன் கேட்டுக்கொண்டார்.

தமிழ் மக்களின் வாழ்வோடும், வளத்தோடும், உயிரோடும் கலந்துவிட்ட காவிரி உரி மையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இட மில்லை என்றும், இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், காவிரி விவ காரத்தில் முந்தைய தமிழக அரசுகள் காட்டிய உறுதியான வழிகாட்டுதல் களையும் நடவடிக்கைகளையும் தற்போ தைய அரசும் தொடர்ந்து பின்பற்றித் தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.

மேலும், தேர்தல் நேரத்தில் தமிழகத்திற்கு வந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தற்போது நிலவும் இந்த இக்கட்டான சூழலில் மவு னம் காப்பது ஏன்? என்ற கேள்வியை யும் அவர் எழுப்பினார்.

அரசியல் நிர்ணய சபையிலேயே நதிநீர் ஒரு மாநிலத்தி லிருந்து மற்றொரு மாநிலத்திற்குச் சென்றால் அது ஒன்றிய அரசுக்குச் சொந்தமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியதை நினைவு கூர்ந்த அவர், இத்தகைய நதிநீர்ப் பிரச்சனைகள் நீடித்தால் நாடு முழுவதும் உள்ள நதிகளைத் தேசியமய மாக்குவது குறித்துச் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.

கர்நாடக அமைச்சருக்குச் பாடம் புகட்டுவோம்: அ. சிம்சன் ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிபிஐ (எம்எல்) மாநில நிலைக்குழு உறுப்பினர் அ. சிம்சன், தமிழகத்தையே தற்பொ ழுது கேள்விக்குறியாக்கியுள்ள காவிரி நீர் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

மேகதாது வில் அணை கட்டத் துடிக்கும் கர்நாடகத் துணை முதலமைச்சரின் செயல்பாடு களுக்குத் தமிழக மக்கள் மற்றும் விவ சாயிகளின் சார்பில் சரியான பாடம் புகட்டப்படும் என்றும், அங்கே அவர்கள் புதிய கட்டுமானங்களை முன்வைத்தால் அதனைத் தடுத்து நிறுத்த இடதுசாரிகள் தங்களின் தொடர் போராட்டங்கள் மூலம் முன்னிற்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

இப்போராட்டமானது ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனத்தையும் தஞ்சையை நோக்கித் திருப்பியுள்ளது என்று கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.