தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை! - சட்டமன்றத்தில் அமைச்சர்கள் பதில்

yesterday
புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை! - சட்டமன்றத்தில் அமைச்சர்கள் பதில்

புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை! - சட்டமன்றத்தில் அமைச்சர்கள் பதில்

சென்னை, ஜூன் 22 - மேகதாது திட்டத்தை முறியடிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமை வதால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்தார். காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் தமிழக அரசு எந்தவிதச் சமரசமும் செய்யாது என்று திட்டவட்டமாக கூறிய அமைச்சர் ஆனந்த், மேகதாது அணையை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளதாகவும், மேக தாது அணைக்கு எதிரான தீர்மானம் பிரத மருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக வும் தெரிவித்தார். மேகதாதுவில் அணை கட்டு வதை முறியடிப்பதன் மூலம் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அரசு உறுதியுடன் செயல்படும் என்று தெரிவித்தார். மேகதாது தொடர்பான முந்தைய தீர்ப்பு களின் இணக்கத்தை தீர்மானிக்க நிபுணர் கள் அடங்கிய மத்திய நீர்வள ஆணையத் தால் மட்டுமே முடியும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் என். ஆனந்த், முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி விரிவான சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் கர்நாடகா

காவிரி நீரைப் பாதுகாக்க திமுக, அதிமுக கட்சிகள் 30 ஆண்டுகளாகப் போராடி வருகின்றன. இந்நிலையில், மேக தாது அணையைக் கட்டி சட்ட சிக்கலை ஏற்படுத்த கர்நாடகா முயல்கிறது. இந்நிலை யில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி கர்நா டகத்தின் அறிக்கையை ஏற்ற மத்திய நீர்வள ஆணையம் மீது நம்பிக்கை இல்லை. இத னாலேயே, புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப் பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு முழு வெற்றி கிடைக்கவே எதிர்க்கட்சித் தலைவர் திருத்தம் கோரியதாகவும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்த பிறகே திருத்தத்தை முன்மொழிந்தார் என்றும் திமுக உறுப்பினர் எ.வ. வேலு சட்ட மன்றத்தில் தெரிவித்தார். மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் குறித்து சபாநாயகர் விளக்கம் அளித்துள்ள தாகவும், முதலமைச்சர் அதனை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார். தவெகவுக்கு இந்த விவகாரத்தில் திமுக ஒத்துழைக்க வேண்டும் என்ற உணர்வோடு தில்லியில் உள்ள வழக்கறிஞர்களிடம் பேசி, திருத்தம் கொண்டு வந்தால்தான் மேகதாது அணை கட்டுவதை நிறுத்த முடி யும் என்பதால் எதிர்க்கட்சித் தலைவர் உதய நிதி இந்தத் திருத்தம் கொண்டு வந்தார் என்று விளக்கினார்.

புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சிறந்தது: தங்கம் தென்னரசு!

சென்னை: மேகதாது அணை தொடர்பான அரசின் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். இதனிடையே, திமுக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ. வுமான தங்கம் தென்னரசு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகை யில், “அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாமக உறுப்பி னர்கள் மேகதாது பிரச்சனை குறித்து ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித் துள்ளனர். இந்த விவகாரத்தில் திமுக முன்மொழிந்த திருத் தத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டது என்பதை நாம் அறிவோம். மேகதாது அணைக் கட்டுமானப் பிரச்சனை என்பது காவிரி நடுவர் மன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்ட பிரச்சனைகளை தாண்டி, இன்னும் முடிவு செய்யப்படாத புதிய பிரச்சனை. பல மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர் சட்டத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்படும் மூன்று நீதிபதிகள் தலைமையிலான நடுவர் மன்றத்தை நாடு வதுதான் சிறந்தது என்று இந்த வழக்கில் நீண்ட காலமாக ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர்களும் வல்லுநர்களும் ஆலோசனை வழங்கியுள்ளனர். அந்த ஆலோசனையின் அடிப்படையில் மேகதாது அணை தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த மார்ச் 4 அன்று,ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வைத்துள்ளோம். இத்தகைய நடுவர் மன்றம் அமை வதால் 2018 பிப்ரவரி 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதை மீண்டும் விவாதப் பொருளாக்கி, தமிழ்நாட்டு அரசி யல் கட்சிகளிடையே பிளவு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவது கர்நாடக அரசுக்கு சாதகமான சூழலை ஏற்ப டுத்திவிடும். எனவே தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று ஒருமனதாக இதை ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும் என்று திமுக சார்பில் வலி யுறுத்துகிறேன்” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.