உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்
23 May 2026, 9:42 pm

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

சென்னை, மே 23 - காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பிற்கு எதிராக மேக தாதுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவ தற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை. அணை கட்டுமான பணிக்காக கர்நாடக அரசு தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசிடம் தருவோம் என்று கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் பேசியுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு கண்டிக் கிறது.

நீதிமன்றத்தை நாடிய அரசு

காவிரி நதிநீர் பிரச்சனையில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு ஆண்டிற்கு 205 டி.எம்.சி வழங்க உத்தரவிட்டது. பிறகு 2007 ஆம் ஆண்டு நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் ஆண்டிற்கு 192 டி.எம்.சியாக குறைக்கப்பட்டது. இதையும் ஏற்றுக் கொள்ளாத கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழ்நாடு அரசும் தமி ழகத்திற்குரிய நீர் பங்கீட்டை பெற உச்ச நீதி மன்றத்தை நாடியது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற காவிரி நீர் வழக்கில் 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில் தமிழ் நாட்டிற்கு ஆண்டிற்கு 177.25 டி.எம்.சி மாத வாரி யாக கர்நாடக அரசு தண்ணீர் வழங்க வேண்டும் என்றது. இதை செயல்படுத்திட காவிரி நடுமன்ற ஆணையம் அமைக்கப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது

உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடகம், ஒவ்வொரு ஆண்டும் மாத வாரியாக வழங்க வேண்டிய தண்ணீரைக்கூட தமிழ்நாடு சட்டப்படி போராடித்தான் பெற வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசு காவிரியில் மேக தாதுவில் புதிய அணை கட்டுவதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய கர்நாடக அரசு கடந்தாண்டு பட்ஜெட்டில் 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதில், ரூ.1000 கோடியை உடனடியாக விடுவித்துள்ளதாக செய்தி கள் வருகின்றன. இது முற்றிலும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பிற்கும் எதிரானதாகும்.

ஒப்புதல் பெறாமல் செய்வதா?

காவிரி நதிநீரை பயன்படுத்தக்கூடிய கர்நாட கம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் காவிரியில் எந்தவொரு புதிய அணைக்கட்டுகளையும், புதிய திட்டங்களையும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதலை பெறாமல் மேற்கொள்ளக் கூடாது என தீர்ப்பில் உள்ள நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர், ‘மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் ஒப்புதலை நாங்கள் பெற வேண்டியதில்லை’ என கூறுவது நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானதாகும். மேலும், காவிரியில் மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பகுதி பாசனம் பாதிக்கப்படுவதோடு, 22 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும் கேள்விக் குறியாக்கப்படும்.

எனவே, ஒன்றிய அரசு கர்நாடக அரசின் இத்த கைய முயற்சிக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம். மேலும் இரண்டு மாநி லங்களுக்கு இடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி வரும் கர்நாடக அரசையும், கர்நாடக துணை முதல்வரையும் வன்மையாக கண்டிக் கிறோம்.

காவிரியில் தமிழ்நாட்டின் பாசன உரிமை யைப் பாதுகாத்திட அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். தமிழ்நாடு அரசும் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.