உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவேண்டும்! மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுக!!
25 May 2026, 8:45 pm

உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவேண்டும்! மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுக!!

தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, மே 25 - மேகதாது அணைத் திட்டத் திற்கு எதிரான தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது:

கர்நாடகத்திற்கு அனுமதி அளித்த ஒன்றிய அரசு

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரு கிறது. மேகதாது அணை, குடிநீர்த் திட்டம் ஆகியவை தொடர்பாக விரி வான ஆய்வறிக்கை தயார் செய்வ தற்கு கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகாம் நிறுவனத்துக்கு, மத்திய நீர்வள ஆணையமும் அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனு மதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த அனுமதி தொடர்பான கடிதத்தை மத்திய நீர் ஆணையம் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் 2018 நவம்பர் 30 அன்று தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்தது.

தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம்

இந்த மனுக்களை உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், என்.வி. அஞ்சரியா ஆகி யோர் அடங்கிய அமர்வு விசாரித்து, கடந்த 2025 நவம்பர் 13 அன்று தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பில், மேகதாது அணைத் திட்ட விவகாரத்தில் விரி வான திட்ட அறிக்கையைத் தயாரிக்க மட்டுமே கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதித்து ள்ளது என்றும், தமிழ்நாடு அரசின் ஆட்சேபணையையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகிய வற்றின் கருத்துகளையும் பதிவு செய்த பிறகே இந்த அனுமதி தரப் பட்டுள்ளது என்றும் தெரிவித்த உச்ச நீதிமன்றம், மேகதாது அணைக் கான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர் வள ஆணையம் ஒப்புதல் அளித்தால், அத்தகைய நிலையில் வழக்கு தொடர்ந்து உச்சநீதிமன்றத் தில் சட்டப்படியான நடவடிக்கை யைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க லாம் என்று கூறியது.

அத்துடன், தமிழ்நாடு அரசின் மனுக்கள் உரிய நேரத்துக்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு தமிழ்நாட்டு அரசின் மனுக்களை முடித்து வைத்தது.

உத்தரவில் பிழை என்று தமிழ்நாடு அரசு முறையீடு

எனினும், இந்த தீர்ப்புக்கு எதி ராக, மறு ஆய்வு மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கெ னவே அளித்த தீர்ப்புக்கு எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது; உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் அமைப்பாகவே காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உள்ளது; அதற்கு மேல் வேறு அதிகாரம் இல்லை. ஆனால், இந்த விவகா ரத்தில் ஆணையத்தை முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அனுமதித்த உத்தர வில் பிழை உள்ளது என்று மறு ஆய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், விபுல் எம். பஞ்சோலி ஆகி யோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 15 அன்று விசாரித்தது.

மறு ஆய்வு மனுவும் தற்போது தள்ளுபடி

அதைத்தொடர்ந்து, இம்மனு மீது தீர்ப்பளித்துள்ள உச்சநீதி மன்றம், மேகதாது அணைத் திட்டத்துக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இதுதொடர் பான தங்களின் மனுவை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது;

மேலும், மேகதாது அணைத் திட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து கடந்த நவம்பர் 13 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டியதில்லை என்பதால், தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது.

தமிழக விவசாயிகளுக்குப் பாதகமான தீர்ப்பு

இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு பாதகமானது ஆகும். காவிரி தொடர் பான உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்புக்கும் விரோதமான தாகும்.

எனவே, காவிரி டெல்டா விவ சாயத்தையும், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை யும் பாதுகாக்க, காவிரி மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலை நிறுத்தும் வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இதுசம்பந்த மாக மேற்கொள்ள வேண்டிய நட வடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலி யுறுத்துகிறது.

இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.